சீன போட்டியாளர்களை எதிர்கொள்ள சாம்சங்கின் புதிய யுக்தி!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சீன போட்டியாளர்களை எதிர்கொள்ள சாம்சங்கின் புதிய யுக்தி!

ரூ. 10,000 க்கு விற்பனை செய்யப்படவுள்ள சாம்சங்கின் இந்த எம்-வரிசை மொபைல்கள் வரும் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஹைலைட்ஸ்
  • சியோமி நிறுவனத்தை விட அதிக விற்பனை செய்ய சாம்சங் திட்டம்
  • சாம்சங்கின் இந்த புதிய வகை போன்களை அமேசானில் வாங்கலாம்
  • இந்த போன்கள் பிரத்தேயகமாக இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டதாக தகவல்

தென்கொரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங், தனது கேலக்ஸி எம்- தொடர் ஸ்மார்ட்போனை, நீண்ட வதந்திகளுக்கு பிறகு வரும் ஜனவரி 28 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திங்களன்று வெளியான செய்தியில் அந்நிறுவனத்தின் சார்பாக தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்- தொடர் ஸ்மார்ட்போன்கள் சக்தி வாய்ந்த கேமராக்கள், பேட்டரிகள் மற்றும் செயலிகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

மேலும் சாம்சங் கேலக்ஸியின் எம்- தொடர் ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப் ஆகிய இரண்டிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த எம் வரிசை போன்களில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20, மற்றும் கேலக்ஸி எம்30 ஆகியவை மூன்று விலைகளுடன் மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளது.

சியோமி போன்ற சீன போட்டியாளர்களிடம் சமீபகாலமாக வீழ்ச்சியை சாம்சங் சந்தித்து வந்த நிலையில், இந்தியாவில் பட்ஜெட் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்த மார்கெட்டில் தனது முன்னணி இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக சாம்சங் வட்டாரம் தெரிவித்துள்ளது.

சாம்சங் தனது மூன்று புதிய எம் தொடர் ஸ்மார்ட்போன்களை, தனது இணையத்தளம் மற்றும் அமேசான்.காம் மூலம் மட்டுமே விற்பனை செய்வதன் மூலம் அந்த நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனையை இரட்டிப்பாக்க உதவுகிறது என சாம்சங் இந்திய மொபைல் வணிகத்தின் தலைவர் கூறினார்.

மேலும் ‘இந்தியாவின் ஆயிரம் ஆயிரம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலேயே இந்த புதிய ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டது என்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே உலக சந்தைகளில் அது அறிமுகம் செய்யப்படும்' என ஆசிம் வார்ஸி தெரிவித்தார்.

 இந்தியாவில் சாம்சங் மொபைல் போன் விற்பனை 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 12 மாதங்களில் 373.5 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறினார். மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகள், ரூ.10,000 மற்றும்  ரூ. 20,000 என இரு வகைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் விரைவான சார்ஜிங் போன்ற பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும் என வார்ஸி கூறினார்.

சாம்சங் இந்திய வணிகம் சார்பாக 250,000 சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 2000 க்கும் அதிகமான பிரத்யேக கடைகள் மூலம் அதன் தொலைபேசிகளை விற்கிறது என்பது கூடுதல் தகவல்.

 

 

 

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.