இரண்டு புதிய நிறங்களில் மீண்டும் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இரண்டு புதிய நிறங்களில் மீண்டும் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்!

இந்த புதிய நிறங்களை 'யுனிக்கார்ன் எடிஷன்' என பெயரிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • புதிய நிறங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் சீனாவில் விற்பனை!
  • பிங்க் மற்றும் நீல நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம்!
  • பல இலவச இணைப்புகளுடன் மீண்டும் விற்பனைக்கு வருகை

சீனாவில் வெளியாகியுள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட் போன்கள், அங்கு காதலர் தினத்தையொட்டி இரண்டு புதிய நிறங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதமே இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்த புதிய நிறங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் மிகுந்த எதிர்பார்பை கிளப்பியுள்ளது. அதன்படி காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் பிங்க் மற்றும் நீல நிறங்களில் இன்று சீனாவில் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஈ-ஷாப்பில் இந்த ஸ்மார்ட்போன் ‘யுனிகார்ன் எடிஷன்' என்ற பெயரில் வெளியாகி விற்பனையில் கலக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 8ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டபோது அரோரா பிளாக், எல்ஃப் ப்ளூ மற்றும் ஏலியன் சில்வர் போன்ற நிறங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy a8s Galaxy A8s

விலையை பொருத்தவரை, இந்திய மதிப்பில் ரூ.29,300 வரை சாம்சங்கின் இந்த ஏ8எஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் போனுடன் பல இலவச பொருட்கள், வட்டியில்லா கடன் மற்றும் நீட்டிக்கப்பட்ட காப்பீடு போன்ற பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் இந்த புதிய நிறங்களில் ஏ8எஸ் வெளியாகியுள்ள நிலையில் மற்ற நாடுகளில் இந்த நிறங்களுடன் ஏ8எஸ் எப்போது வெளியாகும் என்பதை குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் நீளம் கொண்டது. இன்ஃபினிட்டி டிஸ்பிளே மற்றும் 3 பின்புற கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,400mAh  மற்றும் அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.