சாம்சங் கேலக்ஸி A70 அறிமுகமானது; விலை மற்றும் இதர தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சாம்சங் கேலக்ஸி A70 அறிமுகமானது; விலை மற்றும் இதர தகவல்கள்!

ஆன்-ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரின்ட் கொண்டுள்ள A70, ஃபேஷியல் ரெகக்னிஷனையும பெற்றுள்ளது. 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 25W சூப்பர் சார்ஜிங் உள்ளது. 

ஹைலைட்ஸ்
  • மே 1 முதல் கேலக்ஸி A70 விற்பனைக்கு வருகிறது
  • கேலக்ஸி A70 குறித்த அறிவிப்பு சென்ற மாதம் வெளியானது
  • கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் இந்த போன் சந்தைகளில் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி A70 இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்ற மாதம் முதன்முறையாக இந்த போன் குறித்து அறிவிப்பு வெளியிட்டது சாம்சங். இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்த போனுக்கான ப்ரீ-புக்கிங் நடக்கும். மே 1 ஆம் தேதி முதல் சாம்சங் கேலக்ஸி A70 விற்பனைக்கு வரும். சாம்சங் நிறுவனத்தின் A வரிசை போன்களில் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போன் சாம்சங் கேலக்ஸி A70. ஆக்டா- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 25w சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரும் 45000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்டவை இந்த போனின் சிறப்பம்சங்களாகும். 

சாம்சங் கேலக்ஸி A70 விலை:

கேலக்ஸி A70-யின் 6ஜிபி ரேம் மாடல், சுமார் 28,990 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் விற்கப்படும்.
 
ப்ரீ புக்கிங் செய்யும் வாட்டிக்கையாளர்களுக்கு 3,799 ரூபாய் மதிப்புடைய சாம்சங் யூ ஃப்ளெக்ஸ் ப்ளூடூத் ஹெட்செட் 999 ரூபாய்க்கு கிடைக்கும்.

மே1 ஆம் தேதி முதல் நாட்டில் இருக்கும் ரீடெயல் கடைகள், சாம்சங் ஆன்லைன் ஷாப், சாம்சங் ஓபரா ஹவுஸ் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் இந்த போன் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A70 சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு பை ஒன் யூ.ஐ-யில் இயங்கும், டூயல் சிம் ஸ்லாட் கொண்ட சாம்சங் கேலக்ஸி A70-யில் முழு ஹெச்.டி 6.7 இன்ச் ஸ்க்ரீன், சூப்பர் ஆமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. 20:9 ஆஸ்பக்ட் ரேஷியோவில் இது இயங்குகிறது. அக்டா-கோர் குவால்கம் ஸ்னப்டிராகன் 675 எஸ்ஓசி-யால் பவரூட்டப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A70, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வகைகளில் கிடைக்கும். 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் இந்த போனில், 512 ஜிபி வரை சேமிப்பு வசதியைக் கூட்டிக் கொள்ளும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 

போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 32, 8 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமராக்கள் பின்புறத்தில் இருக்கின்றன. அதேபோல முன்புறத்திலும் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கிறது. 

ஆன்-ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரின்ட் கொண்டுள்ள A70, ஃபேஷியல் ரெகக்னிஷனையும பெற்றுள்ளது. 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இந்த போனில் 25W சூப்பர் சார்ஜிங் உள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.