சாம்ஸங் கேலக்ஸி A6+ விமர்சனம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
சாம்ஸங் கேலக்ஸி  A6+  விமர்சனம்!
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் இந்த போனின் விலை 25,999 ரூபாய்
  • பல புதிய வசதிகள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளன
  • இதன் பேட்டரி லைஃப் நன்றாக உள்ளது

 

கேலக்ஸி A6+ ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது சாம்ஸங். 

தென் கொரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான சாம்ஸங், இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே ஸ்கிரீன் தொழில்நுட்பத்தை அதன் A மற்றும் J பட்ஜெட் சீரிஸ் போன்களில் கொண்டு வந்துள்ளதால், A6+ போனிலும் இந்த அதி நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த போனில் 18.5:9 டிஸ்ப்ளே, டூயல் பின்புற கேமரா, முகத்தை கண்டறியும் உணறி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை 25,999 ரூபாய் ஆகும். நோக்கியா 7 ப்ளஸ், மோட்டோ  Z2 ப்ளே மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களுடன் A6+ போட்டி போட உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து இந்த போனை வாங்குவது உகந்தது தானா؟ பார்த்துவிடுவோம்

 

A6+ டிசைன் எப்படி؟

இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிற மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், இதன் டிசைன் மட்டும் பில்டு க்வாலிட்டி மிக நேர்த்தியாக இருக்கிறது. ஆனால், இந்த போனின் எடை 191 கிராம் என்பதால், ஒரு கையில் வைத்து உபயோகப்படுத்துதல் சற்று கடினமாக இருக்கிறது. 7.9 மில்லி மீட்டர் தடிமனுடன் இந்த போன் இருப்பதால், ஹாண்ட்லிங் மேலும் கஷ்டமாகவே இருக்கிறது.

Galaxy A6plus Inline1 Samsung Galaxy A6 Plus Inline 2

வசதிகள் என்னென்ன؟

டூயல் சிம் போடும் வசதியுள்ள இந்த போன் Qualcomm Snapdragon 450 ப்ராசஸர் உடனும், 4 ஜிபி ரேம் உடனும் வருகிறது. போனிலிருந்து எடுக்கவே முடியாத படிக்கான ஒரு 3,500mAh பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இதில், 256 ஜிபி வரை நீட்டிப்பு செய்து கொள்ளும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இதில் மேலும், வை-ஃபை 802.11 a/b/g/n, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், GLONASS, 4G VoLTE, and a 3.5 மில்லி மீட்டர் ஜாக்கி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன. 6 இன்ச்  AMOLED ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன்.

Galaxy A6plus inline2 Samsung Galaxy A6 Plus Inline 1

பெர்ஃபார்மென்ஸ், மென்பொருள் மற்றும் பேட்டரி,

கேலக்ஸி A6+ ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆபரேட்டிங் மென்பொருளில் இயங்குகிறது. `chat over video' என்கின்ற புதிய வசதியை இந்த போனின் மூலம் அறிமுகம் செய்திருக்கிறது சாம்ஸங். இதன் மூலம், வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் ஹாயாக பேச முடியும். ஒரு விஷேசமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சாம்ஸங் குழு தான் இந்த வசதியை கொடுப்பது பற்றி ஆய்வு செய்து கூறியதாம். இந்த விஷயம் கண்டிப்பாக இந்திய பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இந்த போனின் பேட்டரி லைஃப் நன்றாகவே இருக்கிறது. ஹெச்.டி வீடியோக்களை தொடர்ச்சியாக ஓடவிட்டுப் பார்த்ததில், 12 மணி நேரம் 30 நிமிடங்கள் போன் நிற்காமல் ஓடியது. சாதரணமான பயன்பாட்டின் போது, இந்த போன் ஒரு நாளைக்கு மேல் உழைத்தது. ஆனால், போன் சார்ஜிங் மிகப் பொறுமையாகவே இருக்கிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆனது.

Galaxy A6plus inline3 Samsung Galaxy A6 Plus Inline 3

Galaxy A6plus Inline4 Samsung Galaxy A6 Plus Inline 4

கேமரா,

மொத்தம் மூன்று கேமராக்கங் A6+-ல் கொடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு பின்புற கேமரா. ஒரு முன்புற கேமரா. பின்புற கேமரா முறையே, 16 மற்றும் 5 மெகா பிக்சல் திறன் கொண்டவையாக இருக்கின்றன. முன்புற கேமரா 24 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கின்றது. பின்புற கேமரா, சில நேரங்களில் ஃபோகஸ் செய்ய சிரமப்பட்டது. ஆனால், போட்டோ எடுத்தவுடன் நன்றாகவே இருந்தது. முன்புற கேமரா, நல்ல வெளிச்சம் இருக்கும் போது நல்ல புகைப்படத்தைத் தருகிறது. வெளிச்சம் கம்மியானால், புகைப்பட க்வாலிட்டியும் மங்குகிறது. இரண்டு புற கேமராக்களிலும் 1080p க்வாலிட்டியில் வீடியோக்கள் பதிவு செய்ய முடியும்.Samsung Galaxy A6+ in pictures

மொத்தத்தில் எப்படி இருக்கிறது؟

சாம்ஸங் கேலக்ஸி A6+ நல்ல லுக் கொண்ட போனாக இருக்கிறது. அதன் பில்டு க்வாலிட்டி நன்றாக உள்ளது. அதைப் போலத்தான் பேட்டரியும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. தற்போது வரும் நிறைய ஸ்மார்ட் போன்கள், ஆன்லைன் சந்தையில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், A6+ ரீடெய்ல் கடைகளிலும் கிடைப்பது நல்ல விஷயம். ஆனால், 25,990 ரூபாய்க்கு இந்த போன் வாங்கலாமா என்பது கேள்விக்குறி தான். 

கேமராக்கள், வெளிச்சம் நன்றாக இருந்தால், நல்ல புகைப்படங்களைத் தருகின்றன. இருட்டான இடங்களில் கதை வேறு. நோக்கியா 7 ப்ளஸ் மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகியவை இதைவிட பல விஷயங்களில் முந்திச் செல்கின்றன. சாம்ஸங் போன்களின் ரசிகர்கள் இந்த போனை வாங்கலாம். ஆனால், மற்றவர்கள் மேற்குறிபிட்ட இரண்டு போன்களைப் பற்றியும் முழுவதாக தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.