விற்பனைக்கு வந்தது சாம்சங் 'கேலக்சி A80', விலை, சிறப்பம்சங்கள் என்ன?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
விற்பனைக்கு வந்தது சாம்சங் 'கேலக்சி A80', விலை, சிறப்பம்சங்கள் என்ன?

இந்த ஸ்மார்ட்போன் ரோட்டேட்டிங் கேமராவுடன் அறிமுகமாகியுள்ளது.

ஹைலைட்ஸ்
  • உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது
  • இந்த ஸ்மார்ட்போன் ரோட்டேட்டிங் கேமராவை கொண்டுள்ளது
  • அமேசான், ஃப்ளிப்கார்ட், சாம்சங் தளங்களில் விற்பனையாகிறது

சாம்சங் 'கேலக்சி A80' ஸ்மார்ட்போன், இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், நேற்று வரை முன்பதிவிற்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை அமேசான், ஃப்ளிப்கார்ட், சாம்சங் என அனைத்து தளங்களிலும் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால் ரோட்டேட்டிங் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் ரோட்டேட்டிங் கேமராவுடன் அறிமுகமாகியுள்ளது.

சாம்சங் 'கேலக்சி A80': விலை!

இந்தியாவில் ஒரே ஒரு வகையில்தான் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 8GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 47,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. தங்கம் (Angel Gold), வெள்ளை (Ghost White), மற்றும் கருப்பு (Phantom Black) என மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஆகஸ்ட் 1 துவங்கிய இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை அமேசான், ஃப்ளிப்கார்ட், சாம்சங் என அனைத்து தளங்களில் நடைபெறுகிறது. 

சாம்சங் 'கேலக்சி A80': சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டு செயல்படுகிறது. 6.7-இன்ச் FHD+ (1080x2400 பிக்சல்கள்) திரை, 20:9 திரை விகிதம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 730G எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது.

கேமராக்கள் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ரொட்டேட்டிங் கேமராவை கொண்டுள்ளது. இரண்டு கேமரா அமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவும் 8 மெகாபிக்சல் அளவிலான 123-டிகிரி வைட்-ஆங்கிள் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

4G VoLTE, வை-பை, ப்ளூடூத், GPS, USB டைப்-C, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 3,700mAh அளவிலான பேட்டரியை கொண்ட இந்த 'கேலக்சி A80' ஸ்மார்ட்போனிற்கு, 25W அதிவேக சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.