3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s!

சாம்சங் Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்
  • சாம்சங் Galaxy A50s 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது
  • சாம்சங் Galaxy A30s p3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது
  • இந்தியாவில் இதன் விலை என்ன என்பது இன்னும் அறிவிக்கபடவில்லை

கடந்த சில மாதங்களில் சாம்சங் Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள் பற்றி அதிகபடியான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy A50, Galaxy A30 ஸ்மார்ட்போன்களின் புதிப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் போலவே இந்த ஸ்மார்ட்போன்கள் காட்சியளிக்கிறது. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சாம்சங் Galaxy A50s, Galaxy A30s ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் நான்கு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது - கருப்பு (Prism Crush Black), வெள்ளை (Prism Crush White), பச்சை (Prism Crush Green), மற்றும் ஊதா (Prism Crush Violet)

சாம்சங் Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்களின் விலை, விற்பனை!

சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும் அந்த ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதன் முதன்மை கேமரா அதிக தரத்துடன் உள்ளதால்,  Galaxy A50 ஸ்மார்ட்போனைவிட அதிக விலையிலேயே இந்த  Galaxy A50s ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். மறுபுறத்தில் Galaxy A30s ஸ்மார்ட்போனின் திரை தரம், Galaxy A30 ஸ்மார்ட்போனை விட குறைவாக உள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் Galaxy A30 ஸ்மார்ட்போனை விட குறைந்த விலையிலேயே அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவிற்கு வரவுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் full-HD+ (1080x2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED இன்பினிட்டி U திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது என்று தகவல் வெளியாகியிருந்தாலும், குறிப்பாக எந்த வகை என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை. 4GB மற்றும் 6GB அளவிலான RAM, மற்றும் 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 512GB அளவு வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 

கேமரா பற்றி பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரி மற்றும் 15W அதிவேக சார்ஜர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், டைப்-C சார்ஜர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Samsung A30s cover samsung

சாம்சங் Galaxy A30s சிறப்பம்சங்கள்

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் HD+ (720x1560 பிக்சல்கள்) சூப்பர் AMOLED திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்பினிட்டி V நாட்ச் திரை இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டே செயல்படுகிறது. 3GB மற்றும் 4GB அளவிலான RAM, மற்றும் 32GB, 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 512GB அளவு வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 

கேமரா பற்றி பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 25 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரி மற்றும் 15W அதிவேக சார்ஜர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் இண்டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், டைப்-C சார்ஜர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.