'சாம்சங்' நிறுவனத்தின் 64-மெகாபிக்சல் கெமராவுடன் வெளியாகிறதா அடுத்த 'ரெட்மீ' ஸ்மார்ட்போன்?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'சாம்சங்' நிறுவனத்தின் 64-மெகாபிக்சல் கெமராவுடன் வெளியாகிறதா அடுத்த 'ரெட்மீ' ஸ்மார்ட்போன்?

சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகலாம்

ஹைலைட்ஸ்
  • சீனாவில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகலாம்
  • சாம்சங் நிறுவனம் இந்த கேமரா சென்சாரை சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது
  • அடுத்த கேலக்சி A தொடர் ஸ்மார்ட்போன் இந்த கேமராவுடன் வெளியாகலாம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனில் சாம்சங்-கின் 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை பொருத்தி வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாம்சங் நிறுவனம், கடந்த மாதம் தனது 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த கேமரா சென்சார் பொருத்தபட்ட சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன், 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகமாகலாம் என்றவாறு தகவல்கள் வெளியாகியிருந்தன. 

ஐஸ் யூனிவர்ஸ் ( Ice Universe ) என்ற தொழில்நுட்ப வல்லுனர், தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ள தகவலின்படி, சாம்சங் நிறுவனம் 'கேலக்சி A' தொடரில் அறிமுகப்படுத்தவுள்ள அடுத்த ஸ்மார்ட்போனில் இந்த 64 மெகாபிக்சல் கேமராவை பொருத்தி வெளியிடவுள்ளது, அதேபோல ரெட்மீ நிறுவனமும் சீனாவில் அடுத்த அறிமுகப்படுத்தவுள்ள ஸ்மார்ட்போனில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை பொருத்தி வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாம்சங் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார், குறைந்த ஒளியில் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேமராவில் 1080 பிக்சல் ஸ்லோ-மோசன் வீடியோக்களை எடுத்துக்கொள்ளலாம்.

முன்னதாக, இந்த கேமரா சாம்சங் கேலக்சி A70 ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டு வெளியாகும் என தகவல்கள் கசிந்தன. ஆனால், அந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டே அறிமுகமானது. தற்போது, இந்த கேமரா சாம்சங் கேலக்சி A70S பொருத்தப்பட்டு அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெட்மீ நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. ஜியோவின் அடுத்த அதிரடி, 'ஜிகாபைபர்' ஆகஸ்ட் 12 அறிமுகமாகவுள்ளது!
  2. ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களின் அடுத்த விற்பனை எப்போது தெரியுமா?
  3. பட்ஜெட் பாப்-அப் செல்ஃபி ‘ஒப்போ K3’ போன் இன்று முதல் அமேசானில் விற்பனை!
  4. 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  5. ஆகஸ்ட் 7-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது 'விவோ S1', எதிர்பார்க்கப்படும் விலை?
  6. ‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க!
  7. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’!
  8. 64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மீ போன்… முழு விவரம் உள்ளே!
  9. இந்தியாவில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் அறிமுகம்?
  10. விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.