ரெட்மியின் அடுத்த போனில் ‘பாப்-அப் செல்ஃபி’ கேமராவா..?- வீடியோ வெளியிட்ட சியோமி

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரெட்மியின் அடுத்த போனில் ‘பாப்-அப் செல்ஃபி’ கேமராவா..?- வீடியோ வெளியிட்ட சியோமி

Photo Credit: Weibo/ Redmi

இந்தியாவில் ரிலீஸ் ஆகப்போகும் எந்த ரெட்மி போனில், பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது

ஹைலைட்ஸ்
 • சியோமி, பாப்-அப் செல்ஃபி கேமரா தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது
 • ரெட்மி வரிசை போனில் இந்த பாப்-அப் செல்ஃபி வர வாய்ப்புள்ளது
 • ஸ்னாப்டிராகன் 730 எஸ்.ஓ.சி வசதியை அந்த போன் பெற்றிருக்கலாம்

சியோமி நிறுவனம், தான் அடுத்து வெளியிட உள்ள ரெட்மி ஸ்மார்ட் போனில் ‘பாப்-அப் செல்ஃபி' கேமரா வசதியுடன் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வீபோ (Weibo) வலைதளத்தில் சியோமி வெளியிட்ட வீடியோவில், ரெட்மி போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா இருப்பது தெரிய வந்துள்ளது. 

டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தகவல் குறித்து சியோமியின் மனு குமார் ஜெயின், ‘அடுத்து வரவுள்ள ரெட்மி போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்.ஓ.சி ப்ராசஸர் இருக்கும்' என்று மட்டும் கூறியுள்ளார். 

குவால்கம் நிறுவனம், சமீபத்தில்தான் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி ஆகிய ப்ராசஸர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 730ஜி ப்ராசஸர், சாம்சங் கேலக்ஸி A80 போனில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் அந்த போன் இந்திய சந்தைக்கு வரவில்லை.

இந்நிலையில் ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா இருக்கும் என்று பரபரக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவலை சியோமி நிறுவனமே மறுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் ரிலீஸ் ஆகப்போகும் எந்த ரெட்மி போனில், பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. அதை பொறுத்திருந்துதான் அறிய முடியும். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 2. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 3. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 4. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 5. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 6. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 7. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
 8. 8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்!
 9. மூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்!
 10. ‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.