இந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8! 

Redmi Note 8-ன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 48-மெகாபிக்சல் மெயின் ஷூட்டருடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8-ன் ஆரம்ப விலை ரூ. 9,999, 6GB பதிப்பின் விலை ரூ. 12,999
  • மறுபுறம், Redmi 8, ரூ. 7,999-யாக உள்ளது
  • Redmi Note 8-ன் விற்பனை Amazon, Mi.com-ல் நடைபெறும்

Redmi Note 8 மற்றும் Redmi 8 போன்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும். இரண்டு போன்களும் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வைக்கப்படும். Redmi Note 8, Amazon, Mi.com மற்றும் Mi Home stores வழியாகவும், Redmi 8, Flipkart, Mi.com மற்றும் Mi Home stores மூலமாகவும் வழங்கப்படும். Redmi Note 8 Pro வாங்க விரும்புவோர், வரும் புதன்கிழமை அதாவது டிசம்பர் 11 அன்று இந்த போன் விற்பனைக்கு வரும்.


இந்தியாவில் Redmi Note 8, Redmi 8-ன் விலை:

Redmi Note 8 உடன் தொடங்கி, இந்தியாவில் அடிப்படை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 9,999, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999-யாக விலையிடப்படுள்ளது. இரண்டு மாடல்களும் Moonlight White, Neptune Blue, Space Black மற்றும் Cosmic Purple வண்ண விருப்பங்களில் வருகின்றன. குறிப்பிட்டுள்ளபடி, Redmi Note 8, Amazon, Mi.com மற்றும் Mi Home stores வழியாக இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். 

Redmi Note 8 Review

மறுபுறம், Redmi 8, இந்தியாவில் அடிப்படை 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 7,999, அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 8,999-யாக விலையிடப்படுள்ளது. இருப்பினும், ஜியோமி 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை மட்டுமே அறிமுக விலையில் முதல் ஐந்து மில்லியன் யூனிட்டுகளுக்கு ரூ. 7,999-க்கு வழங்குகிறது. இந்த போன் Emerald Green, Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இது Flipkart, Mi.com மற்றும் Mi Home stores மூலம் மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும்.

Redmi 8 Review


Redmi Note 8-ன் விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்புடன் Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 13-megapixel செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

Redmi Note 8-ல் 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை ஜியோமி வழங்கியுள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக் ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. Redmi Note 8, 18W fast சார்ஜின் ஆதரவோடு, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் 158.3x75.30x8.35mm அளவீடையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.

Redmi 8-ன் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Redmi 8, Android 9 Pie உடன் MIUI 10 இயங்குகிறது. Corning Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.22-inch HD+ Dot Notch display அம்சத்தைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது.

Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில்  f/1.8 lens உடன் 12-megapixel Sony IMX363 முதன்மை சென்சார் மற்றும் 2-megapixel depth sensor ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Face Unlock உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் அம்சங்களும் உள்ளன.

ஜியோமி, Redmi 8-ல் 64 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்கியுள்ளது. இது microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, infrared, wireless FM radio, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. ஜியோமி, Redmi 8-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.