அறிமுகமாகும் Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi TV, RedmiBook 14: முக்கிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அறிமுகமாகும் Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi TV, RedmiBook 14: முக்கிய தகவல்கள்!

Redmi Note 8, Redmi Note 8 Pro: நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்
 • Redmi Note 8 ஸ்னேப்டிராகன் 665 SoC ப்ராசஸரை கொண்டிருக்கலாம்
 • Redmi Note 8 Pro 4,500mAh பேட்டரியை கொண்டிருக்கும்
 • Redmi TV-யின் 70-இன்ச் வகை அறிமுகமாகலாம்

சியோமி நிறுவனம் Redmi Note 8, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள், க் என அனைத்து தயாரிப்புகளையும் இன்று (ஆகஸ்ட் 29)  சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தயாரிப்புகள், பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சி CST ஆசிய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வில் அறிமுகமாகும் ரெட்மி நோட் தொடரில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும், அவற்றில் Pro  வகை இந்த நிறுவனத்தின் முதல் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு ஒருநாள் முன்னதாகவே ரியல்மீ நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் கேமராவான Realme XT ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. இன்னும் அந்த நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலை வெளியிடவில்லை. 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை அறிவித்த முதல் நிறுவனம் ரியல்மீயாக இருந்தாலும், அதை விற்பனைக்கு கொண்டுவரும் முதல் நிறுவனம் என்ற பெயரை பெற சியோமிக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. 

ரெட்மி நிறுவனம் இந்த அறிமுக நிகழ்வை தனது வெய்போ கணக்கு மற்றும் சியோமியின் அதிகாரப்பூரவ இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. மேலும், இந்த நோட் 8 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் Redmi TV, புதிப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகமாகவுள்ளது.

Redmi Note 8, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள்: விலை, சிறப்பம்சங்கள் (எதிர்பார்க்கப்படுவது)

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் FHD+ திரையுடன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. 6GB மற்றும் 8GB என்ற அளவிலான RAM வகைகளுடன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன், சேமிப்பில் 64GB மற்றும் 128GB என இரண்டு அளவுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, கேமராவை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொருத்தவரை 4,500mAh பேட்டரி, QuickCharge 4+ சார்ஜர் வசதி, MIUI 10, 20 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் ஆகியவை அடங்கும். 

Redmi Note 8 ஸ்மார்ட்போனை பொருத்தவரை ஸ்னேப்டிராகன் 665 SoC ப்ராசஸர் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro போலவே இந்த ஸ்மார்ட்போனும் 6.53-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனும் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும். குறிப்பிடத்தக்கதாக 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும். மற்ற கேமராக்கள், Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் போலவே அமைந்திருக்கும். 

இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் வகைகளை பொருத்தவரை முன்னதாக 91Mobiles வெளியிட்ட கசிவுகளின்படி, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB சேமிப்பு அளவுடன் 1,799 யுவான்கள் (சுமார் 18,000 ரூபாய்) என்ற விலையிலும், 8GB RAM + 128GB சேமிப்பு வகை 2,099 யுவான்கள் (சுமார் 21,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Redmi Note 8 ஸ்மார்ட்போன் 4GB RAM + 64GB சேமிப்பு வகையில் 1,199 யுவான்கள் (சுமார் 12,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் உறுதியானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

redmi tv large

Redmi TV, புதிப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப்

ரெட்மியின் டிவி பற்றி பெரிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இன்று அறிமுகமாகும் டிவிக்களில், ஏதாவது ஒரு வகை 70-இன்ச் திரையை கொண்டிருக்கும். மேலும் இந்த நிறுவனம் வெளியிட்ட டீசர்களை வைத்து பார்க்கையில், மெல்லிசான திரையுடன், வீடியோ கால்களுக்காக பாப்-அப் கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப் 10வது தலைமுறை இன்டெல் கோர் ப்ராசஸரை கொண்டு செயல்படும், அனைத்திற்கும் மேலாக முந்தைய லேப்டாப்புடன் ஒப்பிடுகையில் 13 சதவிகிதம் செயல்திறன் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.  RedmiBook 14 லேப்டாப் 14-இன்ச் FHD திரை, 'Nvidia GeForce MX250' கிராபிக்ஸ், மற்றும் 8GB RAM ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. போட்டிக்கு போட்டி! வெறும் 98 ரூபாய்க்கு அதிரடி ரீசாஜ் ப்ளானை அறிவித்த ஜியோ!
 2. Vodafone Idea-வின் அதிரடி... குறைந்த விலையில் அறிமுகமான ரீசார்ஜ் பிளான்கள்!
 3. Samsung Galaxy S11+ -ல் 108-மெகாபிக்சல் சென்சாரா....?! முழுசா தெரிஞ்சுக்கோங்க....!
 4. இந்தியாவில் குவாட் ரியர் கேமராக்களுடன் வெளியானது Vivo V17!
 5. இந்தியாவில் இன்று வெளியாகிறது Vivo V17!
 6. Amazon, Vivo Site வழியாக அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Vivo U20!
 7. டூயல்-ரியர் கேமராவுடன் வருகிறதா OnePlus 8 Lite....?! விவரங்கள் உள்ளே!
 8. Airtel-ஐ பின்பற்றும் Vodafone Idea! புதிய ப்ரீபெய்ட் ப்ளான்களைப் பற்றி தெரிஞ்சுகோங்க....!
 9. Android-ல் Call Waiting அம்சம்! WhatsApp-ன் அடுத்த அப்டேட்!
 10. Xiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.