4 பின்புற கேமரா Redmi Note 8, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
4 பின்புற கேமரா Redmi Note 8, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

சீனாவில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையிலிருந்தே அறிமுகமாகியுள்ளது.

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டுள்ளது
  • Redmi Note 8 ஸ்னேப்டிராகன் 665 SoC பிராசஸரை கொண்டுள்ளது
  • இரண்டு ஸ்மார்ட்போன்களுமே MIUI 10 மூலம் இயங்குகிறது.

Redmi Note 8 தொடர் ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. பல தகவல் கசிவுகளை தொடர்ந்து சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. Redmi Note 8 தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது - Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro. எப்படி ரெட்மி நோட் 7 தொடரில் மேலும் ஸ்மார்ட்போன்களை இணைத்ததோ, சியோமி நிறுவனம் வரும் காலங்களில் அதேமாதிரி ரெட்மி நொட் 8 தொடரிலும் புதிய வகைகளை அறிமுகப்படுத்தலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, சியோமி நிறுவனம், ரெட்மி நிறுவனத்தின் பெயரிலான முதல் Redmi TV மற்றும் புதுப்பிக்கப்பட்ட RedmiBook 14 லேப்டாப் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Redmi Note 8, Redmi Note 8 Pro விலை!

Redmi Note 8 ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB சேமிப்பு வகை 999 யுவான்கள் (சுமார் 10,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB + 64GB மற்றும் 6GB + 128GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1,199 யுவான்கள் (12,000 ரூபாய்) மற்றும் 1,399 யுவான்கள் (14,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Dream Blue), கருப்பு (Meteorite Black), மற்றும் வெள்ளை (White) என மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17-ல் முதல் விற்பனையை சந்திக்கவுள்ளது. 

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை பொருத்தவரை 6GB RAM + 64GB சேமிப்பை கொண்ட அடிப்படை வகை 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB + 128GB மற்றும் 8GB + 128GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1,599 யுவான்கள் (16,000 ரூபாய்) மற்றும் 1,799 யுவான்கள் (18,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை (Pearl White), மரகதம் (Ice Emerald), மற்றும் சாம்பல் (Electric Light Grey) என மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3-ல் முதல் விற்பனையை சந்திக்கவுள்ளது. 

இதுமட்டுமின்றி Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் வோர்ல்ட் ஆப் வார்கிராப்ட் லிமிடெட் எடிசன் வகையும் அறிமுகமாகியுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் ஸ்மார்ட்போன் பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.

redmi note 8 weibo Redmi Note 8

Redmi Note 8, Redmi Note 8 Pro சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட Redmi Note 8, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை அடிப்படையாக கொண்டு MIUI 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi K20-ஐ போன்றே 6.39-இந்க் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 90 சதவிகித திரை-உடல் விகிதம் மற்றும் 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னேப்டிராகன் 665 SoC பிராசஸரை கொண்டுள்ளது. 

கேமராக்களை பொருத்தவரை Redmi Note 8 ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

Redmi Note 8 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர், டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் இரண்டு நானோ சிம் வசதி கொண்டு, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை அடிப்படையாக கொண்டு MIUI 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi K20-ஐ போன்றே 6.53-இந்க் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 90 சதவிகித திரை-உடல் விகிதம் மற்றும் 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. இது மட்டுமின்றி கேமிங் அனுபவத்தை கணக்கில் கொண்டு, இந்த ஸ்மார்ட்போனில் கேம் டர்போ 2.0 மோட் (Game Turbo 2.0 mode) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்றபடி Redmi Note 8 ஸ்மார்ட்போனை போன்றே 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என மிதமுள்ள மூன்று கேமராக்கள் அமைந்துள்ளது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

Redmi Note 8 ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர், டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  2. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  3. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  4. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  5. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  6. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  7. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  8. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
  9. இந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை?
  10. Flipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை?
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.