Deep Sea Blue வண்ணத்தில் வருகிறது Redmi Note 8 Pro!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
Deep Sea Blue வண்ணத்தில் வருகிறது Redmi Note 8 Pro!

Redmi Note 8 Pro, 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro இப்போது மொத்தம் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது
  • 6GB + 64GB, 6GB + 128GB மாடல்களில் இந்த போன் தைவானில் கிடைக்கிறது
  • இந்த போன் 20-megapixel செல்ஃபி கேமராவுடன் வருகிறது

Redmi Note 8 Pro இப்போது Deep Sea Blue என்ற புதிய வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இந்த புதிய வண்ண மாடல் தைவானில் கிடைக்கிறது. இது ஏற்கனவே Mi.com-ல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய வண்ணமானது 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலிலும், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலிலும் கிடைக்கிறது.


Redmi Note 8 Pro-வின் விலை:

Redmi Note 8 Pro Deep Sea Blue வேரியண்ட் தைவானின் உள்ள Mi.com-ல் பட்டியலிடப்படுள்ளது. 6GB + 64GB ஸ்டோரேஜின் புதிய வண்ண மாடலின் விலை TWD 6,599 (சுமார் ரூ. 15,400) மற்றும் 6GB + 128GB மாடலின் விலை NTD 7,599 (சுமார் ரூ. 17,700) ஆகும். Deep Sea Blue ஆப்ஷனைத் தவிர, பழைய Gamma Green, Halo White மற்றும் Shadow Black shades ஆகியவற்றுடன் இந்த போன் பட்டியலிடப்படுள்ளன. இந்த புதிய வண்ண விருப்பம் மற்ற சந்தைகளில் தொடங்கப்படுமா இல்லையா என்பதில் எந்த தகவலும் இல்லை.

இந்தியாவில், Redmi Note 8 Pro மூன்று கட்டமைப்புகளில் ஜியோமியால் அறிமுகப்படுத்தப்பட்டவை - 6GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 14,999, 6GB RAM + 128GB பதிப்பு மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 15,999 ஆகும். Gamma Green, Halo White மற்றும் Shadow Black shades மட்டுமே இப்போது கிடைக்கிறது.


Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்:

இந்த போன் இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது. 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது. Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் (liquid cooling) ஆதரவையும் ஜியோமி சேர்த்துள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.

64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட Redmi Note 8 Pro, நிறுவனத்தின் முதல் போன் ஆகும். இதில் 8 மெகாபிக்சல் wide-angle shooter மற்றும் two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack மற்றும் IR blaster ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.