சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S': ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S': ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை!

சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகவுள்ள ரெட்மீ நோட் 7S

ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில்தான் விற்பனையாகவுள்ளது
  • சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகவுள்ளது.
  • 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு, இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது


முன்னதாக நோட் 7 வரிசையில், அடுத்த ஸ்மார்ட்போனாக, ரெட்மீ நோட் 7S-ஐ வருகின்ற மெ 20-ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில்தான் விற்பனையாகவுள்ளது என்பதை, அந்த நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனிற்கென ஒரு பக்கத்தை உருவாக்கி, இந்த தகவலை உறுதி செய்துள்ளது. முன்னதாக வருகின்ற மே 20 அன்று, இந்தியாவில் 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகவுள்ளது.

ஃப்ளிப்கார்ட்டின் டீசர் பக்கத்தின்படி, இந்த ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன், இந்தியாவில் விற்பனைக்கு வருகையில், அந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட்டின் செயலி மற்றும் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். தற்போது ஃப்ளிப்கார்ட்டின் செயலியில் மட்டுமே இந்த பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எப்போது இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரப்போவதாக இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்துகொள்ள, அறிமுகத்தன்று நினைவூட்ட வசதிகளை அந்த பக்கத்தில் ஏற்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். அதன்படி, இதில் நீங்கள் பதிவு செய்துகொண்டீர்கள் என்றால், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின்போது, அது பற்றி உங்களுக்கு நினைவூட்டப்படும். ஃப்ளிப்கார்ட் தளம் மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன் எம் ஐ தளங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Redmi note 7s teaser flipkart app Redmi Note 7S Teaser

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அந்த பக்கத்தில், இந்த நோட் 7S-ன் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, வரிசையாக அடுக்கி நீங்கள் எதிர்பார்த்த வண்ணத்திலேயே, சிறந்த கேமராவை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது என குறிப்பிட்டிருந்தது. மேலும், அந்த பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன், சிறந்த பேட்டரி, மிகச்சிறந்த செயல்பாடு, அழகான அமைப்பு வடிவமைப்பு மற்றும் நம்பிக்கையான தரத்தில் வெளியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளது. 

இதைவைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன், 6.3-இன்ச் FHD+ திரை, 19.5:9 என்ற திரை விகிதம் கொண்டிருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவல்காம்  ஸ்னேப்ட்ராகன் 730 அல்லது ஸ்னேப்ட்ராகன் 730G ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 4000mAh அளவிலான பெரிய பேட்டரி வசதி கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன், புதன்கிழமை இந்த ரெட்மீ நோட் 7S பற்றி வெளியிட்ட தகவலில், 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு, இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது, ரெட்மீ நோட் தொடரின் அடுத்த ஸ்மார்ட்போன். மேலும் அவர் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில், வருகின்ற மே 20 தேதி வெளியாகவுள்ளது என்பதையும் கூறியிருந்தார். 

Redmi Note 7S Teaser MI forum

மேலும் சியோமி நிறுவனம் வெளியிட்டிருந்த மற்றொரு புகைப்படத்தில், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வாட்டர் ட்ராப்(Water Drop) நாட்ச் கொண்டிருக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது. 

அதுமட்டுமின்றி  சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன், இன்று வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தின்படி இந்த ரெட்மீ நோட் 7S சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் சீன வெர்சனான ரெட்மீ நோட் 7 போன்றே இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சீன வெர்சனான ரெட்மீ நோட் 7, பற்றி கூறுகையில் அந்த ஸ்மார்ட்போன்  6.3-இன்ச் FHD+ திரை, 19.5:9 என்ற திரை விகிதம், ஸ்னேப்ட்ராகன் 660 ப்ராசஸர், 4000mAh பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட் போன்ற அம்சங்களை கொண்டிருந்தது. மேலும், இதில் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராவும், 13 மெகாபிக்சல் முன்புற கேமராவும் கொண்டிருந்தது.

இந்த ரெட்மீ நோட் தொடரில், ரெட்மீ நோட் 7S புதியதாக அறிமுகமாகவுள்ள நிலையில், ரெட்மீ நோட் 7 Pro மற்றும் ரெட்மீ நோட் 7 என இரண்டு மாடல்கள் சமீத்தில் வெளியாகி, இன்னும் சந்தையில் வெற்றிகரமாக விற்பனையாகிக்கொண்டிடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில், பிப்ரவரி மாதம் ரெட்மீ நோட் 7 Pro, அறிமுகம் செய்யப்பட்டது என்றும், அது இந்த வாரத்தின் துவக்கத்தில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையிலான விற்பனையை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.