ரெட்மி ‘நோட் 7 ப்ரோ’ போனில் இந்த ‘சப்போர்ட்’ இருக்கும்- முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரெட்மி ‘நோட் 7 ப்ரோ’ போனில் இந்த ‘சப்போர்ட்’ இருக்கும்- முழு விவரம் உள்ளே!

ரியல்மி 3 ப்ரோ போனில், ஃபோர்ட்நைட் வீடியோ கேமிற்கான சப்போர்ட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஹைலைட்ஸ்
 • ரெட்மி நோட் 7 ப்ரோ-விற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு
 • ஸ்னாப்டிராகன் 675 ப்ராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது இந்த போன்
 • ரியல்மி 3 ப்ரோ அடுத்த வாரம் சந்தைக்கு வருகிறது

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன், ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட்டை விரைவில் பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் ‘ரியல்மி 3 ப்ரோ' ஸ்மார்ட் போனை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், இந்தத் தகவலை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ போனில், ஃபோர்ட்நைட் வீடியோ கேமிற்கான சப்போர்ட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரம் குறித்து சியோமி நிறுவனம், ‘ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட் பற்றி ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ரெட்மி நோட் 7 ப்ரோ-விற்கு இருப்பது குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 ப்ராசஸர் ஆகும். இது புதிய சிப்செட் வகையாகும். ஃபோர்ட்நைட்டின் முக்கிய சந்தையான அமெரிக்காவிலேயே இந்த சிப்செட் ரிலீஸ் ஆகவில்லை. எனவே ஃபோர்ட்நைட் கேமை உருவாக்கியவர்கள் இந்த சிப்செட்-ஐ சோதனை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் ஸ்னாப்டிராகன் ப்ராசஸருக்கு சான்றிதழ் வாங்க முடியவில்லை' என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. 

சான்றிதழ் வாங்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பதில் தெளிவில்லை. ஆட்ரினோ 530 அல்லது அதற்கு மேல் திறன் கொண்ட ப்ராசஸர் இருந்தால் அது ஃபோர்ட்நைட் கேமிற்கு ஏற்றதாக இருக்கும். ரெட்மி நோட் 7 ப்ரோ பெற்றிருப்பதோ, ஆட்ரினோ 612 GPU ஆகும். எனவே ஃபோர்ட்நைட் சப்போர்ட் வாங்குவது கடினமானதாக இருக்காது. 

ரெட்மி நோட் 7 ப்ரோ, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பப்ஜி மொபைல் கேமிற்கு இந்த போனில் சப்போர்ட் இருந்தது. ஆனால், இன்னொரு மிகவும் பிரபலமான மொபைல் வீடியோ கேமான ஃபோர்ட்நைட்டிற்கு நோட் 7 ப்ரோ-வில் சப்போர் இல்லை. இதனை பயன்படுத்தி போட்டி நிறுவனமான ரியல்மி, ரியல்மி 3 ப்ரோ-வில், ஃபோர்ட்நைட் கேமிற்கு சப்போர்ட் இருக்கும்படி போனை உருவாக்கியுள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ஹவாய் வாட்ச் 'GT ஏக்டிவ்', இந்தியாவில் அறிமுகம்!
 2. ஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்!
 3. இந்தியாவில் சந்திர கிரகணம் 2019: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 4. மிண்டும் விற்பனையில் 'விவோ Z1 Pro': முழு தகவல்கள் உள்ளே!
 5. 'ரியல்மீ 3i', இந்தியாவில் அறிமுகமான ரியல்மீயின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன்!
 6. பாப்-அப் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் கேமரா, 'ரியல்மீ X'-ன் விலை என்ன?
 7. 11 வயது சிறுமியின் கைகளில் வெடித்த 'ஐபோன்'!
 8. அறிமுகமானது சியோமியின் 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன், விலை என்ன?
 9. அமேசானின் விற்பனையில் பச்சை நிற 'எல்.ஜி W30': முழு விவரம் உள்ளே!
 10. தற்போது விற்பனையில் 'ஒன்ப்ளஸ் 7 - மிரர் ப்ளூ' வகை: விலை என்ன?
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.