தொடரும் அதிரடி சேல்கள்! விற்பனையில் அசத்தும் ரெட்மி போன்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
தொடரும் அதிரடி சேல்கள்! விற்பனையில் அசத்தும் ரெட்மி போன்கள்!

ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த சேல் வரும் மார்ச் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது.

ஹைலைட்ஸ்
 • வரும் மார்ச் 20 -ம் தேதி மீண்டும் ஒரு சேலை நடத்த சியோமி நிறுவனம் திட்டம்!
 • ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் சுப்பர் சேல்.
 • இரண்டு போன்களுக்கும் டேட்டா ஆஃபர் தரும் ஜியோ மற்றும் ஏர்டெல்!

சமீபத்தில் சியோமி நிறுவனம் சார்பில் வெளியான பட்ஜெட் தயாரிப்புகளான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பால் இரண்டு போன்களும் வெளியான சில நேரத்திலேயே 'சோல்டு அவுட்' ஆனது.

நேற்று நடைபெற்ற சேலிலும் இந்த தயாரிப்புகள் விரைவில் விற்பனையானதால் தங்களது வாடிக்கையாளர்களுக்காக வரும் மார்ச் 20 -ம் தேதி மீண்டும் ஒரு சேலை நடத்த சியோமி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் நடைபெறும் இந்த சேலில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ என இரண்டு போன்களும் வெளியாகவுள்ளது. 

 

ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஆஃபர்கள்:
வழக்கம் போல மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன்களுக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் சார்பில் டபுள் டேட்டா ஆஃபர்கள் கிடைகின்றன. அதுபோல பிளிப்கார்டில் ஆக்சிஸ் பஸ் க்ரடிட்கார்டை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கவுள்ளது. 

மேலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 2,400 மதிப்பிலான கேஷ்பேக் ஆஃபர்களை மை ஜியோ ஆப்பில் பெற முடியும். சியோமி தரப்பில் வெளியான தகவல் படி இதுவரை சுமார் 2,00,000 யூனிட் போன்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்திய மார்கெட் விலை:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ தயாரிப்பு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்த போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் தயாரிப்பு ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெப்டியுன் புளூ, நெபியூலா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 7 போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட தயாரிப்பு ரூ.9,999க்கும் அதே போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஓனிக்ஸ் பிளாக் மற்றும் ரூபி ரெட் நிறங்களில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 2. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 3. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 4. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 5. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 6. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
 7. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
 8. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
 9. ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்!
 10. இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.