முழு நேர விற்பனையில் ரெட்மீ 'நோட் 7 Pro', எப்போது வரை?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
முழு நேர விற்பனையில் ரெட்மீ 'நோட் 7 Pro', எப்போது வரை?

முழு நேர விற்பனையில் ரெட்மீ நோட் 7 Pro-வை பெற்றுக்கொள்ளுங்கள்

ஹைலைட்ஸ்
 • 13,999 ரூபாய் என்ற துவக்க விலையில் ரெட்மீ 'நோட் 7 Pro'
 • ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் முழு நேர விற்பனை
 • ஜூலை 31 வரை நடைபெறவுள்ளது

சியோமி நிறுவனத்தின் பிரபல பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மீ 'நோட் 7 Pro-வை, ஃப்ளாஷ் சேலில் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. அறிமுகமாகி பல நாட்கள் ஆகியும் ஃப்ளாஷ் சேலில் இதே நிலைதான். ஆனால், அந்த கடினத்தை குறைக்கும் வகையில் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், ஜூலை 25 வரை இந்த ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்திருந்தது. அந்த விற்பனை முடிந்த சில நாட்களிலேயே, மீண்டும் இந்த ஸ்மார்ட்போனை முழு நேர விற்பனையில் வைத்துள்ளது சியோமி நிறுவனம். தற்போது Mi மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனையில் உள்ள இந்த ஸ்மார்ட்போன், ஜூலை 31 வரை முழு நேர விற்பனையில் இருக்கும்.

Mi தளத்தில் அனைத்து வகைகளிலும், அனைத்து வண்ணங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் தளத்தில் 4GB+64GB மற்றும் 6GB+128GB என இரண்டு வகைகள் மட்டுமே, குறிப்பிட்ட வண்ணத்தில் மட்டுமே விற்பனையில் உள்ளது.

ரெட்மீ 'நோட் 7 Pro': விலை!

4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு, 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்று மூன்று வகைகளில் இந்த ரெட்மீ 'நோட் 7 Pro 'விற்பனையில் உள்ளது. அவற்றில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 13,999 ரூபாய். 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 15,999 ரூபாய். 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரெட்மீ 'நோட் 7 Pro'-வின் விலை 16,999 ரூபாய். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்தது.

ரெட்மீ 'நோட் 7 Pro': சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ரெட்மீ 'நோட் 7 Pro' ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், வாட்டர் ட்ராப் நாட்ச் திரை  கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில், 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

4000mAh பேட்டரி அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் அதிவேக சார்ஜ் 4.0 வசதியையும் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக்-உடன் 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 2. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 3. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 4. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 5. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 6. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
 7. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
 8. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
 9. ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்!
 10. இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.