6ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு வசதி பெரும் ரெட்மீ நோட் 7 ப்ரோ!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
6ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு வசதி பெரும் ரெட்மீ நோட் 7 ப்ரோ!

வசந்த கால திருவிழா நிறைவுக்கு வந்த பின்னர் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

ஹைலைட்ஸ்
  • இனி 3ஜிபி ரேம்,32ஜிபி சேமிப்பு வசதி பெறாத ரெட்மீ நோட் 7 ப்ரோ!
  • அதற்கு பதிலாக 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியீடு!
  • ஸ்னாப்டிராகன் 675 SoC பெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் நடந்த ரெட்மீ நோட் 7 அறிமுக விழாவில் விரைவில் ரெட்மீ நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் சோனி IMX86 சென்சார் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

ரெட்மீ போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வாசகர் ஒருவர் சமூகவலைதளம் ஒன்றில் ரெட்மீ நொட் 7 ப்ரோ போனுக்கு  பல புது அம்சங்கள் வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் அந்த பதிவில் ரெட்மீ நோட் 7 ப்ரோ போனுக்கு வழக்கத்திற்கு மாறாக, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகத்திற்கு பதிலாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகம் கொண்ட அமைப்பு இதில் வேண்டும் என கூறினார்.

அதை ட்விட்டரில் ரீட்வீட் செய்த நிர்வாக தலைவர் லீ ஜூன் ரெட்மீ நோட் ப்ரோ  6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகம் கொண்ட அமைப்பை பெறலாம் என பதில் அளித்தார். இந்த அறிவிப்பின் மூலம் 6 ஜிபி ரேம்மை ஆரம்ப ரேம்மாக கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மீ நோட் 7 ப்ரோ திகழ்கிறது.

4,000mAh பேட்டரி, ஸ்னாப் டிராகன் 675 எஸ்.ஓ.சி, விரைவாக சார்ஜ் செய்யும் வசதி என பல அப்டேட்களுடன் ரூ. 5,800 இந்த ரெட்மீ நோட் 7 ப்ரோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.