48 மெகா பிக்சல் மற்றும் 4,000mAh பேட்டரி பவருடன் அசத்தும் ரெட் மீ!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
48 மெகா பிக்சல் மற்றும் 4,000mAh பேட்டரி பவருடன் அசத்தும் ரெட் மீ!

ரெட் மீ நோட் 7 வகை ஸ்மார்ட் ஃபோன்கள் பல நிறங்களில் வெளியாகுகிறது.

ஹைலைட்ஸ்
  • Xiaomi Redmi Note 7 packs a 4,000mAh battery
  • The smartphone is priced starting at CNY 999
  • It sports a 48-megapixel Sony IMX586 sensor

சியோமி நிறுவனத்தின் கீழ் தயாராகும் முதல் ரெட்மீ ஸ்மார்ட் ஃபோன் ஆன ரெட்மீ நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 48 மெகா பிக்சல் கேமாரவுடன் களமிறங்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் 4,000 mAh பேட்டரியுடன் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த புதிய ரெட்மீ நோட் 7 -னின் விலை ரூ.10,300 இருந்து தொடங்குகிறது. 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரியைக் கொண்ட இதேபோன் ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படும் எனவும், அதே வகையில் 64 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட் ஃபோன் அதிகபட்சமான விலையில் ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15 முதல் சீனாவில் விற்பனைக்குத் தயாராகும் ரெட்மீ நோட் 7 ஸ்மார்ட் ஃபோன் ட்வைலைட் கோல்டு, ஃவான்டசி கோல்டு, பிரையிட் பிளாக் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோனின் எம்.ஐ.யு.ஐ என்னும் மென்பொருள் மற்றும் அண்ட்ராய்டு ஓரியோவில் இயங்கும் எனவும் 6.3 இஞ்ச் கொண்ட டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். 3 ஜிபி ரேம் முதல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை சேமிப்பு வசதி உள்ளதால் பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த ஃபோனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் உள்ள 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் போட்டிரேட் மோட் கேமராக்களின் உதவியால் தரமுடைய புகைப்படங்கள் எடுக்க முடியும். இப்போதே, பலர் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரெட் மீ நோட் 7 வகை ஸ்மார்ட் ஃபோனில் 4,000mAh பேட்டரி அளவு உள்ளதால் சுமார் 7 மணி நேரம் வரை கேமிங்கிற்கு பயன்படுத்த முடியும். மேலும் வேகமாக சார்ஜை ஏற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் இந்த ஸ்மார்ட் ஃபோனுக்கு அதிகபடியான வரவேற்பு கிடைத்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.