இந்தியாவில் 'கேம் சேஞ்சராகும்' ரெட்மி நோட் 7; சியோமியின் அதிரடி!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் 'கேம் சேஞ்சராகும்' ரெட்மி நோட் 7; சியோமியின் அதிரடி!

இந்தியாவில் ரூ.9,999 முதல் விற்பனை துவங்கியது!

ஹைலைட்ஸ்
 • ரூ.9,999 விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 7
 • வரும் மார்ச் 6 முதல் விற்பனைக்கு வெளியீடு!
 • தனது சீன மாடலைவிட பல மாற்றங்களுடன் வெளியீடு!

பல வார எதிர்பார்புகளுக்குப் பிறகு இன்று ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இந்த அறிமுக நிகழ்ச்சியில் ரெட்மி நோட் 7 போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் சர்ப்ரைஸ் ரிலீஸ் செய்யப்பட்டது.

சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி நோட் 7 தற்போது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்து ரெட்மி - சியோமி பிராண்டின் கீழ் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாகும். சீனாவில் கடந்த மாதம் வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை விட மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பிராசஸர்கள் மற்றும் சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.

சியோமி நிறுவனத்தின் இந்தியத் தலைவரான மனு குமார் ஜெயின் 'ரெட்மி ரோட் 7' இந்தியாவில் சியோமியின் மதிப்பை முற்றிலும் மாற்றிவிடும் என சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அறிமுக சலுகைகள்:

சியோமி ரெட்மி நோட் 7 போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி மாடலுக்கு ரூ.9,999 விலையாக சியோமி நிர்ணயத்துள்ளது. அதுபோல 4ஜிபி ரேம்/64 ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் ரூ.11,999 ரூபாய்கு விற்பனை செய்யபட உள்ளது. ஓன்எகஸ் ப்ளாக், ரூபி ரெட் மற்றும் சாபையர் ப்ளூ என மூன்று நிறங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

வரும் மார்ச் 6 ஆம் தேதில் முதல் ஃபிளாஷ் சேல் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த ஃபிளாஷ் சேல் பிளிப்கார்ட், அமேசான், எம்ஐ.காம் போன்ற தளங்களில் இடம் பெற உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஆஃப்லைன்' கடைகளிலும் இந்த போன் வெளியாக உள்ளது.

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை வாங்குபவர்களுக்கு 1,120 ஜிபி (4ஜி) டேட்டா மற்றும் வரம்பற்ற இலவச கால்களை 'ஏர்டெல் தாங்க்ஸ் பெனிஃபிட்ஸ்' வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

redmi note 7 pro make in India Make in India

ரெட்மி நோட் 7 அமைப்புகள்:

6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி  அமைப்புகளையும் ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது.

இதர வசதிகளாக (3ஜிபி/ 4ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இந்த போனில் இரண்டு பின்புற கேமரா சென்சார்களை இருக்கும் நிலையில், அதில் ஓன்று 12 மெகா பிக்சலை கொண்ட முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.

கூடுதலாக 4,000mAh பேட்டரி, பின்புற ஃபின்கர் பிரிண்ட் சென்சார், டைப் சி போர்ட் மற்றும் கியூக் சார்ஜ் சப்போர்ட் போன்றவற்றை இந்த போன் பெற்றுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருளைப் பெறுத்தவரை ஆண்டிராய்டு 9 பைய் மற்றும் எம்ஐயுஐ 10-ல் இயங்குகிறது.

இன்று வெளியாகின ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சியோமி தயாரிப்புகளுக்கு இருக்கம் மதிப்பை அதிகரிக்க மிகவும் முக்கியமானவை. இந்த போன்களின் அறிமுகத்தால் பட்ஜெட் தயாரிப்புகளை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சாம்சங் நிறுவனத்திற்கு சவால் அதிகரிக்கும் எனப்படுகிறது

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 2. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 3. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 4. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 5. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 6. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
 7. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
 8. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
 9. ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்!
 10. இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.