டூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
டூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G!

Redmi K30 5G வேரியண்ட் Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது
  • Redmi K30 4G வேரியண்ட் Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது
  • Redmi K30, 8GB RAM வரை, 256GB ஸ்டோரேஜ் வரை வழங்குகிறது

Redmibook 13, முதல் Redmi router மற்றும் Redmi smart speaker உடன் Redmi K30 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோமி 4G மற்றும் 5G வேரியண்டில் இந்த போனை வழங்கவுள்ளது. 


Redmi K30, Redmi K30 5G-யின் விலை:

சீனாவில் Redmi K30 5G-யின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 1,999 (சுமார் ரூ. 20,100)-யாகவும், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 2,299 (சுமார் ரூ. 23,100)-யாகவும், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 2,599 (சுமார் ரூ.26,100 )-யாகவும் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 2,899 (சுமார் ரூ. 29,100)-யாகவும்  விலையிடப்படுள்ளது. Redmi K30 5G, Deep Sea Light, Time Monologue, Flower Shadow, Purple Jade Fantasy வண்ண விருப்பங்களில் கிடைக்கும். போனை Mi.com மற்றும் JD.com-ல் ஜியோமி பட்டியலிட்டுள்ளது, மேலும் முன் விற்பனை இன்று தொடங்க உள்ளது.

மறுபுறம், Redmi K30 4G வேரியண்ட், சீனாவில் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 1,599 (சுமார் ரூ. 16,100)-யாகவும், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 1,699 (சுமார் ரூ. 17,100)-யாகவும், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 1,899 (சுமார் ரூ. 19,100)-யாகவும் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 2,199 (சுமார் ரூ. 22,100)-யாக விலையிடப்பட்டுள்ளது. இந்த 4G வேரியண்ட் Deep Sea Light, Flower Shadow, Purple Jade Fantasy வண்ண விருப்பங்களில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.


Redmi K30 4G, Redmi K30 5G-யின் சிறப்பம்சங்கள்:

Redmi K30 டூயல்-சிம் (நானோ+ நானோ) slots-ஐ ஆதரிக்கிறது. இது, Android 10-ஐ அடிப்படியாக கொண்ட MIUI 11-ஆல் இயங்குகிறது. இந்த போன் 20:9 aspect ratio, 91 percent screen-to-body ratio, Corning Gorilla Glass 5 protection மற்றும் 120Hz refresh rate உடன் 6.67-inch full-HD+ (1080x2400 pixels) hole-punch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 5G வேரியண்ட், 7nm Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது. அதே சமயம் 4G வேரியண்ட் Snapdragon 730G processor-ஆல் இயக்கப்படுகிறது. இண்டர்னல் ஸ்டோரேஜ் 64GB, 128GB மற்றும் 256GB விருப்பங்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், சேமிப்பக விரிவாக்கத்திற்கு hybrid microSD card slot (256GB வரை) இந்த இரண்டு போன்களும் ஆதரிக்கின்றன.

கேமராக்களைப் பொறுத்தவரை, Redmi K30 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பை செங்குத்து முறையில் வைக்கிறது மற்றும் பின்புற பேனலின் மேல் மையத்தில் அமைந்துள்ளது, அதைச் சுற்றி ஒரு சுவாரஸ்யமான வட்ட வடிவ வளையம் உள்ளது. குவாட் ரியர் கேமரா அமைப்பில், f/1.89 aperture, 1/1.7-inch சென்சார் மற்றும் 6P lens உடன் 64-megapixel Sony IMX686 சென்சார் முக்கிய பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. 5-megapixel macro lens, a 2-megapixel depth sensor, and an 8 -megapixel 120 degree wide-angle சென்சார் ஆகியவை பிரதான கேமராவுக்கு உதவுகின்றன. அம்சங்களில் Mimoji, Super Night Scene Mode, RAW format ஆதரவு மற்றும் பிற AI-backed அம்சங்கள் ஆகியவை அடங்கும். 4 ஜி வேரியண்டில், 5-megapixel macro கேமரா, 2 megapixel கேமராவால் மாற்றப்படுகிறது.

முன்பக்கத்தில், Redmi K30 மற்றும் Redmi K30 5G ஆகியவை இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, அவை கட்அவுட்களுடன் திரையின் மேல் வலது விளிம்பில் வைக்கப்படுகின்றன. மேலும், கட்அவுட் வெறும் 4.38mm மெல்லியதாக இருக்கும். சிறந்த portraits-க்கு 20-megapixel பிரதான முன் சென்சார் மற்றும் 2-megapixel depth  சென்சார் உள்ளது.

Redmi K30 5G பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒப்பிடும்போது, 4 ஜி வேரியண்ட் 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 5 ஜி வேரியண்டில் பெரிய இணைப்பு அம்சங்கள் dual-band 4 ஜி / 5 ஜி ஆதரவு (SA/NSA) மற்றும் 5 ஜி Multilink மற்றும் 5 ஜி ஸ்மார்ட் அம்சங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். வலுவான செயல்திறனைப் பேணுகையில் குறைந்த சக்தி நிர்வாகத்தை உறுதிப்படுத்த 5 ஜி ஸ்மார்ட் புத்திசாலித்தனமாக நெட்வொர்க்கை சரிசெய்கிறது. இரண்டு போன்களிலும் உள்ள பிற இணைப்பு விருப்பங்களில் NFC, 5G GPS, USB Type-C port, and 3.5mm audio jack ஆதரவு ஆகியவை அடங்கும். இந்த போன்கள் Hi-Res Audio-வையும் ஆதரிக்கின்றன.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.