48 மெகாபிக்சல் கேமரா கொண்ட "ரெட்மீ K20": மே 28-ல் வெளியீடு!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
48 மெகாபிக்சல் கேமரா கொண்ட

மே 28 அன்று அறிமுகமாகவுள்ள ரெட்மீ K20

ஹைலைட்ஸ்
  • அறிமுக நிகழச்சி பெய்ஜிங்கில் நடைபெரும்.
  • இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்குகிறது
  • இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது

ரெட்மீ நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனை வருகின்ற மே 28-ல் சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஒரு டீசர் வாயிலாக இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம். 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு இந்த கேமரா வெளியாகவுள்ளதாக இந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த கேமரா மூன்று பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவில் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவிலும் வெகுவிரைவில் அறிமுகமாகும் என இந்திய ரெட்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் ஒரு டீசர் வாயிலாக தெரிவித்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று, ரெட்மீ நிறுவனம் வெய்போவில் பதிவிட்டிருந்த பதிவின் படி இந்த ரெட்மீ K20 ஸ்மார்ட்போன், மே 28 அன்று அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழச்சி பெய்ஜிங்கில் நடைபெரும் என்றும், அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்வு துவங்கவுள்ளது என்றும் அறிவித்திருந்தது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணி ஆகும். 

redmi k20 launch date china weibo Redmi K20

முன்னதாகவே, இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு வெளியாகும் என ரெட்மீ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், இந்த கேமராவில் சோனி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சீனாவிலுள்ள ரெட்மீ நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் 960fps ஸ்லோ-மோசன் வீடியோ எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.

redmi k20 48 megapixel camera teaser weibo Redmi K20

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது என்பதை உறுதி படுத்தியிருந்த மனு குமார் ஜெய்ன், அதற்காக ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்தது,"சந்தையிலுள்ள புதிய ஸ்மார்ட்போன்களுக்காக ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். கில்லர் 2.0: விரைவில் வருகிறது" என குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 7 Pro-வின் சிறப்பம்சங்கள் போலவே, சிறப்பம்சங்களை கொண்டு அதற்கு போட்டியாகவும் வெளியாகலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர். 

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன்  855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என மூன்று பின்புற கேமராகளும், 32 மெகாபிக்சல் முன்புற கேமராவும் பொருத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.