விற்பனையில் ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
விற்பனையில் ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!

ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்கள் 4000mAh பேட்டரி கொண்டு அறிமுகமாகியுள்ளது

ஹைலைட்ஸ்
  • ரெட்மீய் K20 Pro ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது
  • ஏர்டெல் டபிள் டேட்டா சலுகைகளை வழங்கவுள்ளது
  • ஸ்மார்ட்போன்களுடன் 999 ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் ஹார்டு கவர்களை இலவசம்

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலை 17 அன்று அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் Mi.com தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. 

6.39 இன்ச் FHD+ திரை, இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், பாப்-அப் செல்பி கேமரா, 3 பின்புற கேமராக்கள், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா என பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள். ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டும், ரெட்மீ K20 ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டும் அறிமுகமாகியுள்ளது.

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: விலை!

6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது.

இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மஎன இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் இந்த விற்பனை நடைபெறவுள்ளது.

சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன்களுடன் 999 ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் ஹார்டு கவர்களை இலவசமாக வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனம், 249 ரூபாய் மற்றும் 299 ரூபாய் ஆகிய திட்டங்களுக்கு டபிள் டேட்டா திட்டத்தை வழங்கவுள்ளது. 

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
  2. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
  3. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
  4. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  5. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
  6. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
  7. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
  8. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
  9. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
  10. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.