ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது!

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro பாப்-அப் செல்பி கேமராக்களை கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
 • இந்த ஸ்மார்ட்போன் மற்ற சியோமி ஸ்மார்ட்போன்கள் போல் விளம்பரங்களை காட்டாது
 • ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் 27,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாயுள்ளது
 • ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் 21,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாயுள்ளது

சமீபத்தில் இந்திய சந்தைகளில், சியோமி நிறுவனம் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன்களான ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் 21,999 ரூபாய் மற்றும் 27,999 ரூபாய் என்ற விலைகளில் இன்று தனது முதல் விற்பனையை சந்திக்கவுள்ளது. ரெட்மீ நிறுவனத்தின் அதிக விலை பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான ரெட்மீ K20 ஸ்மார்ட்போனின் விலை சர்ச்சைக்குள்ளானது. இது குறிந்து சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு குமார் ஜெய்னும், ரசிகர்களுக்கு மனம் திறந்த ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். 

இப்படி இருக்க, இந்த நிறுவனம் விமர்சிக்கப்படும் மற்றொரு பகுதி, விளம்பரங்கள். ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள், இந்த பிரச்னை குறித்து கவலைப்படத்த தேவையில்லை என சியோமி நிறுவனம் கூறியுள்ளது. புதுடெல்லியில் இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தின்போது சியோமி இந்தியாவின் சந்தைப்படுத்தல் தலைவரான அனூஜ் சர்மா,'இன்று அறிமுகமாகவுள்ள ரெட்மீ K-தொடர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள், விளம்பர வழி பணமாக்குதல் கொண்டிருக்காது' என கூறியுள்ளார்.

இதை உறுதி செய்யும் வகையில் சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு ஜெய்ன், இந்த ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள் பணமாக்குதல் நுட்பங்கள் எதுவும் இன்றியே அறிமுகமாகவுள்ளது என கூறியிருந்தார். 

redmi k20 price Redmi K20 first sale date price in india

மனு குமார், இந்த விளம்பரங்கள் வழி பணமாக்குதல் பற்றி பேசுகையில்,"ஏராளமான நிறுவனங்கள் அடிப்படையில் இதைச் செய்கின்றன, கிட்டத்தட்ட எல்லோரும் இதைச் செய்கிறார்கள், ஏதோவொரு வடிவத்தில் அல்லது மற்றொறு வடிவத்தில், ஏறக்குறைய பணமாக்குதலை எல்லோரும் செய்கிறார்கள். நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதால்தான், மக்கள் இதை பெரிதாக பேசுகிறார்கள்” என கூறினார். 

ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 Pro உண்மையில் பிற சியோமி ஸ்மார்ட்போன்கள் போன்று பல இடங்களில் விளம்பரங்களை காண்பிக்கவில்லை என்றாலும், சில பயனர்கள் இன்னும்  Mi மியூசிக் மற்றும் Mi வீடியோ போன்ற பயன்பாடுகளிலிருந்து விளம்பரம் தென்படுகிறது என கூறியுள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு மிகவும் எளிதானது, நோட்டிபிகேசன்களை ஆப் செய்தாலே போதும்.  

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 2. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 3. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 4. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 5. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 6. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
 7. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
 8. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
 9. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 10. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.