'ஓபன் சேல்' மூலம் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'ஓபன் சேல்' மூலம் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனை!

Redmi Go: இந்தியாவில் ரூ.4,499 முதல் விற்பனையாகும் ரெட்மி கோ!

ஹைலைட்ஸ்
  • 24 மணிநேர ஓபன் சேலில் 'ரெட்மி கோ' ஸ்மார்ட்போன்!
  • ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது!
  • இதுவரை ஃபிளாஷ் சேலில் இந்த போன் விற்பனை செய்யப்பட்டது.

Redmi Go Flash Sale: ரெட்மி கோ போன்களுக்கான ஃபிளாஷ் சேல்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது 24x7 நேரமும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் சார்பில் இந்த போன் எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் 'ஓபன் சேல்' முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஆண்ட்ராய்டு கோ மென்பொருள் கொண்ட சியோமியின் ரெட்மி கோ (Redmi Go) தயாரிப்பு இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 3,000mAh பேட்டரி வசதி, வரம்பற்ற கூகுள் ஃபோடோஸ் சேமிப்பு மற்றும் 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் கொண்ட கூகுள் உதிவியாளர் என இந்த ஸ்மார்ட்போன் பல சிறப்பு அமைப்புகளை பெற்றுள்ளது.

ரெட்மி கோ விலை (Redmi Go Price) மற்றும் அறிமுக சலுகைகள்:

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட மாடல் இந்தியாவில் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வாங்க முடியும்.

அறிமுக விற்பனையைத் தொடர்ந்து ரூ.2,200 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த போனுக்குத் தருகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் இந்த போனுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர்க்கு கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி போன்ற வசதிகள் கிடைக்கின்றன.

ரெட்மி கோ அமைப்புகள் (Redmi Go Specifications) :

இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்டுள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது. மேலும் 5 இஞ்ச் ஹெச்டி திரை, குவாட்-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது.

பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் மாட்யூலை கொண்டுள்ளது. ஹெடிஆர் அமைப்புகள், ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல ஸ்மார்ட் அமைப்புகளை இந்த போன் பெற்றுள்ளது.

இந்த போனில் 8ஜிபி சேமிப்பு வசதி மட்டுமே உள்ள நிலையில் சியோமி நிறுவனம் சார்பில் 128 ஜிபி வரையுள்ள எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இடம் பெற்றுள்ளது. 137 கிராம் மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.