இந்தியாவில் ரெட்மி கோ தயாரிப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் ரெட்மி கோ தயாரிப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஸ்னாப்டிராகன் 425 பிராசஸரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்
 • கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகும் ரெட்மி கோ!
 • இரண்டு வகை சேமிப்பு வசதிகளுடன் இந்த போன் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
 • 3,000mAh பேட்டரி பவருடன் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.

சியோமி நிறுவனத்தின் முதல் அண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் தயாரிப்பான ரெட்மி கோ, பிலிப்பைன்ஸில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ரெட்மி கோ தயாரிப்பை இந்தியாவில் வெளியிட சியோமி நிறுவனம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, ரெட்மி கோ தயாரிப்பு இந்தியாவில் வரும் மார்ச் 19 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் ஒரு விழாவில் அறிமுகபடுத்தப்படலாம் எனப்படுகிறது. சுமார் 12 மணிக்கு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், ஆரம்ப நிலை போனின் வசதிகை மட்டுமே பெற்றிருக்கும்.

ஸ்னாப்டிராகன் 425 SoC, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டுள்ளது. இந்த புதிய போனின் அறிவிப்பை டிவிட்டரில் பதிவு செய்த சியோமியின் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின், ரெட்மி கோ ஒரு ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் என்றும் இதன் மூலம் பலரும் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வாய்பைப் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Mi.com தளத்தில் இது குறித்து பல டீசர்கள் வெளியாகியுள்ள நிலையில் போனின் பல முக்கிய அம்சங்களை கொண்டு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ரெட்மி கோ விலை:

கடந்த ஜனவரி மாதம் பிலிப்பைன்ஸில் முன்பதிவுக்கு வெளியான ரெட்மி கோ சுமார் ரூ.5,400 மதிப்புக்கு வெளியானது. ரெட்மி 6 ஏ இந்தியாவில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.5,000க்கு குறைவான விலையிலையே விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

ரெட்மி கோ அமைப்புகள்:

5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் வசதி என ஸ்மார்ட்போனின் அடிப்படை வசதியை இந்த ரெட்மி கோ பெற்றுள்ளது. குவாட்-கோர் குவல்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேம் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8 மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதிகளுடன் வெளியாகிறது.

மேலும் இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகிறது. சியோமி நிறுவனம் இந்த போனில் 8 மெகா பிக்சல் பின்புற கேமராவும் செல்ஃபிக்காக 5 மெகா பிக்சல் கேமராவும் இருக்கும் என்றுள்ளது.

கேமரா வசதிகளான ஹெச்டிஆர் மோட், பர்ஸ்ட் மோட் மற்றும் பல முக்கிய ஃபில்டர்கள் இந்த போனில்  இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியுள்ளதால் 128 ஜிபி வரை சேமிப்பு வசியை அதிகரித்துக் கொள்ளலாம்.

ப்ளூடூத் 4.1 கனெக்டிவிட்டி மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ள நிலையில், ஆன்லைன் எக்ஸ்குளுசிவ் போனாக இருக்குமாக என்கின்ற அறிவுப்பு இன்னும் வெளியாகவில்லை.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 2. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 3. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 4. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 5. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 6. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
 7. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
 8. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
 9. ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்!
 10. இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.