5000 mAh பேட்டரி வசதி கொண்ட Redmi 8A இந்தியாவில் அறிமுகம்: விலை & விவரக்குறிப்புகள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
5000 mAh பேட்டரி வசதி கொண்ட Redmi 8A இந்தியாவில் அறிமுகம்: விலை & விவரக்குறிப்புகள்!

Redmi 8A, 5,000 mAh லி-பாலிமர் பேட்டரியை 18W வேகமான சார்ஜிங் செய்கிறது

ஹைலைட்ஸ்
  • Redmi 8A, செப். 29 முதல் விற்பனைக்கு வரும்
  • ஸ்னாபிடிராகன் 439 SoC மூலம் இந்த போன் இயங்கும்
  • 8- மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவை இந்த போன் பெற்றுள்ளது

Redmi 7A -க்கு அடுத்தபடியாக Redmi 8A இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய Redmi ஸ்மார்ட்போன் சியோமியின் ஆரம்ப நிலையான Redmi A வரிசைக்குக் கீழ் வருகிறது. இது "இந்தியாவின் பிடித்த வகை போன்கள்" என்று கூறப்படுகிறது. சீன நிறுவனம் Redmi 8A-வில் ஒரு "Aura Wave Grip" வடிவமைப்பையும், Splash-Resistance P2i நானோ வசதியையும் வழங்கியுள்ளது. ஹேண்ட்செட் ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்சுடன் வருவதோடு, "டாட் நாட்ச்" என்றும் அழைக்கின்றனர். இது அதன் நுழைவு-நிலை தொடர்களுக்கான முதல் நிறுவனமாகும். கூடுதலாக, Redmi 8A மூன்று வெவ்வேறு வண்ண நிறங்களில் வருவதோடு, இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வயர்லெஸ் எஃப்எம் ரேடியோவை வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரியைத் தவிர, வேகமான சார்ஜிங் செய்வதற்கான அமைப்பும் உள்ளது. மேலும், Xiaomi Redmi 8Aவை Realme C2 மற்றும் சாம்சங் Galaxy M10 போன்றவற்றுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியாளராக முன்வைக்கிறது.

இந்தியாவில் Redmi 8A விலை, அறிமுக சலுகைகள்:

இந்தியாவில் ரெட்மி 8A விலை, 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 6,499 ரூபாயும், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 6,999 ஆகவும் இருக்கிறது. இது மிட்நைட் பிளாக், ஓஷன் ப்ளூ மற்றும் சன்ஷேடு ரெட் ஆகியவற்றில் வருகிறது.

Xiaomi, இந்தியாவில் Redmi 8Aவை பிளிப்கார்ட் மற்றும் Mi.com மூலம் விற்பனை செய்யத் தொடங்கும். பின்னர், ஆஃப்லைன் கடைகள் மூலம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதல் விற்பனை செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 மணிக்குத் தொடங்கும். இந்த handset செப்டம்பர் 30 முதல் Mi home store மூலம் கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் கீழ் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளையும் பெற முடியும்.

நினைவுகூற, Xiaomi இந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய சந்தையில்  2 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Readmi 7Aவின் ஆரம்ப விலையாக 5,999 ரூபாய் என்று அறிவித்தது.

Redmi 8Aவின் விவரக்குறிப்புகள், அம்சங்கள்

டூயல் சிம் (நானோ) ரெட்மி 8 ஏ ஆண்ட்ராய்டு 9 பை ஐ MIUI 10 உடன் இயக்குகிறது. மேலும், 6.22 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே 19: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், ரெட்மி 7A ஐ இயக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC ஐ தொலைபேசி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 3 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவைப் பொறுத்தவரை, Redmi 8A, 12-megapixel Sony IMX363 சென்சார் பின்புறத்தில் எஃப் / 1.8 லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது. மேலும், AI போர்ட்ரெய்ட் பயன்முறை மற்றும் AI காட்சி கண்டறிதல் போன்ற Pre-loaded அம்சங்களும் உள்ளன. போனில், AI ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

ரெட்மி 8A, 32 ஜிபி ஸ்டோரஜை கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C, மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.

கடைசியாக, Redmi 8A, 5,000 mAh லி-பாலிமர் பேட்டரியை 18W வேகமான சார்ஜிங் செய்கிறது. பெட்டியில் 10W சார்ஜர் சேர்க்கப்படும் என்றும், 18W சார்ஜர் தனித்தனியாக வாங்கப்பட வேண்டும் என்றும் சியோமி கேஜெட்ஸ் 360-விடம்  உறுதிப்படுத்தியுள்ளது.

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.