5,999 ரூபாயில் அறிமுகமான 'ரெட்மீ 7A': எப்போது விற்பனை?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
5,999 ரூபாயில் அறிமுகமான 'ரெட்மீ 7A': எப்போது விற்பனை?

5.45-இன்ச் HD திரையை கொண்டுள்ளது இந்த 'ரெட்மீ 7A'

ஹைலைட்ஸ்
  • இந்த ரெட்மீ 7A 5,999 ரூபாய் என்ற விலையிலிருந்து துவங்குகிறது
  • இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட வாரன்டி அளித்துள்ளது சியோமி
  • கடந்த மே மாதம், இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது

இந்தியாவில் 'ரெட்மீ 7A' இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, ரெட்மீ நிறுவனம் இந்த 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போன் ஜூலை 4 அன்று அறிமுகமாகும் என கூறியிருந்தது. அதன்படி வியாழக்கிழமையான இன்று, இணைய நேரலை மூலமாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் HD+ திரை, ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர், 4,000mAh பேட்டரி அளவு பொன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கேலக்சி M10, நோக்கியா 2.2 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், முன்னதாக மே மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மீ 7A: என்ன விலை, எப்போது விற்பனை?

முன்னதாக சீனாவில் வெளியான இந்த ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Matte Black), நீலம் (Matte Blue), மற்றும் தங்கம் (Matte Gold) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 11 தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரெட்மீ 7A: சிறப்பம்சங்கள்!

இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 5.45-இன்ச் HD திரை (720x1440  பிக்சல்கள்), 18:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது அந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் அலவிலான கேமராவை கொண்டுள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் அம்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10W சார்ஜருடன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 256GB வரையில் சேமிப்பை கூட்ட microSD கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் 4G, வை-பை, ப்ளூடூத் v4.0 வசதி, மைக்ரோ-USB, 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.