டிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
டிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G! 

Realme XT 730G மற்றும் truly wireless earbuds அறிமுகத்தை அறிவிக்க ரியல்மி ஒரு ஊடக அழைப்பை அனுப்பியுள்ளது

ஹைலைட்ஸ்
  • Realme XT 730G, அடிப்படையில் Realme X2-ன் இந்தியா மாறுபாடாக இருக்கும்
  • ரியல்மி நிர்வாகிகள், உண்மையான வயர்லெஸ் இயர்பட்ஸ்களை கிண்டல் செய்துள்ளனர்
  • Realme XT 730G, Qualcomm Snapdragon 730G மூலம் இயக்கப்படும்

Realme XT 730G டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ரியல்மி வெள்ளிக்கிழமை அனுப்பிய ஊடக அழைப்பின் மூலம் தெரியவந்துள்ளது. Realme XT 730G செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X2-வின் இந்தியா வேரியண்டாக அறிமுகமாகும். புதிய இடைப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போனுடன், சீன நிறுவனம் தனது முதல் உண்மையான வயர்லெஸ் இயர்பட்களையும், ஆப்பிள் ஏர்போட்களுக்கான பட்ஜெட் பதிலாகத் தோன்றும். புதிய ரியல்மி இயர்பட்களை, ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) வெள்ளிக்கிழமை கேலி செய்தார். இவை பல வண்ண விருப்பங்களில் வருவதுடன், ஆப்பிள் ஏர்போட்ஸ் (Apple AirPods) போன்ற பெரிஸ்கோப் வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

ரியல்மி அனுப்பிய முறையான அழைப்பு, Snapdragon 730G SoC உடனான Realme XT 730G, டிசம்பர் 17-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. கடந்த மாதம் Realme X2 Pro அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆரம்பத்தில் கிண்டல் செய்யப்பட்ட முதல் உண்மையான வயர்லெஸ் இயர்பட் புதிய ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என்பதையும் இந்த அழைப்பு எடுத்துக்காட்டுகிறது. அழைப்பில் இடம்பெறும் ஒரு ஸ்கெட்ச், earbuds, Apple AirPods போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் - பெரிஸ்கோப் (periscope) வடிவ earplugs மற்றும் LED ஒளியுடன் சிறிய சார்ஜிங் கேஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக உண்மையான வயர்லெஸ் இயர்பட்ஸை கிண்டல் (wireless earbuds) செய்தார், புதிய படத்தை பிரகாசமான மஞ்சள் வண்ண விருப்பத்தில் காண்பிக்கும் தனது படத்தை ட்வீட் செய்தார். ஷெத்தின் ட்வீட்டைத் தொடர்ந்து, ரியல்மி இந்தியா CMO Francis Wang மற்றும் தயாரிப்பு மேலாளர் ஸ்ரீ ஹரி (Product Manager Sree Hari) ஆகியோர் படங்களை பதிவிட்டனர். அந்த படங்கள் புதிய ரியல்மி இயர்பட்ஸின் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண வகைகளை பரிந்துரைக்கின்றன.


இந்தியாவில் Realme XT 730G-யின் விலை (எதிர்பார்க்கப்படுபவை)

இந்தியாவில் Realme XT அறிமுகப்படுத்தப்பட்டபோது, Realme XT 730G செப்டம்பர் மாதம் மீண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன், அடிப்படையில் Realme X2-ன் இந்தியா வேரியண்டாக வருகிறது.

இந்தியாவில் Realme XT 730G விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், செப்டம்பர் மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்ட Realme X2 விலைக்கு ஏற்ப இது இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு CNY 1,599 (சுமார் ரூ. 16,200)-ல் தொடங்குகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு CNY 1,899 (சுமார் ரூ. 19,300) விலைக் குறியைக் கொண்டுள்ளது.


Realme XT 730G-யின் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

Realme X2-வின் இந்தியா வேரியண்டாக Realme XT 730G வரும் என்பதால், இது போன்ற விவரக்குறிப்புகள் பட்டியலைக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. நினைவுகூர, டூயல்-சிம் (நானோ) Realme X2 Android Pie அடிப்படையிலான ColorOS 6-ஐ இயக்குகிறது மற்றும் 19.5:9 aspect ratio உடன் 6.4 inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் 6GB மற்றும் 8GB LPDDR4X RAM ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், இது 64-megapixel முதன்மை Samsung GW1 சென்சார் மற்றும் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

Realme X2, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியவை. தவிர, இந்த போன் 30W VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.