Black Friday Offers ஆரம்பம்: இந்தியாவில் திறந்த விற்பனைக்கு வரும் Realme X2 Pro !

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
Black Friday Offers ஆரம்பம்: இந்தியாவில் திறந்த விற்பனைக்கு வரும் Realme X2 Pro !

Realme X2 Pro, 90Hz Super AMOLED டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • திறந்த விற்பனை Flipkart, Realme online store மூலம் நேரலையில் உள்ளது
  • இன்று இரவு 11:59 மணி வரை திறந்த விற்பனை நேரலையில் இருக்கும்
  • Realme X2 Pro கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

நிறுவனம் தனது invite-only ஆரம்ப அணுகல் விற்பனையை முடித்த சில நாட்களுக்குப் பிறகு, Realme X2 Pro இப்போது இந்தியாவில் 24 மணிநேரம் திறந்த விற்பனையில் உள்ளது. flagship Realme போன் Flipkart மற்றும் Realme online store வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த சிறப்பு விற்பனை Realme-யின் Black Friday Sale-ன் ஒரு பகுதியாகும். நினைவுகூர, Realme X2 Pro கடந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்தியாவில் Realme X2 Pro-வின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme X2 Pro-வின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 29,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 33,999-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Lunar White மற்றும் Neptune Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இவை இரண்டும் Flipkart மற்றும் நிறுவனத்தின் பிளாக் வெள்ளி விற்பனையின் (Black Friday Sale) கீழ் Realme online store மூலம் வாங்குவதற்கு கிடைக்கின்றன. இந்த திறந்த விற்பனை இன்று இரவு 11:59 மணி வரை நேரலையில் உள்ளது.

Realme X2 Pro-வின் விற்பனை சலுகைகளில் DJI Osmo Mobile 3 வாங்கினால் ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும்.  மேலும், முறையான வெளியீட்டின் போது அறிவிக்கப்பட்டபடி, ஸ்மார்ட்போன் ஆறு மாதங்கள் வரை, ரூ. 11,500 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்கள் கிடைக்கிறது.  பிளிப்கார்ட் மூலம் Realme X2 Pro வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு no-cost EMI பலன்களுடன் card-less credit ஆப்ஷன் கிடைக்கும். 

Realme X2 Pro Review

Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 7-க்கான பீட்டா சோதனையிலும் உள்ளது. மேலும், 20:9 aspect ratio, 90Hz refresh rate, 135Hz touch sampling rate, 402ppi pixel density, DC dimming 2.0 தொழில்நுட்ப ஆதரவுடன்  6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதனுடன் 91.7 சதவீதம் screen-to-body ratio, அதேபோல் Corning Gorilla Glass 5 protection ஆகியவையும் உள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 12GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. 

Realme X2 Pro, 256GB வரை ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. Realme X2 Pro-வில் six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung ISOCELL Bright GW1 முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் உள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle லென்ஸோடு 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. இது portrait shots-ஐ முன் கேமரா ஆதரிக்கிறது.

Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash சார்ஜ் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. வெறும் 33 நிமிடங்களில் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய தனியுரிம தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 18W USB PD மற்றும் Quick சார்ஜ் ஆதரவும் உள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.

Realme X2 Pro போனில் Dolby Atmos மற்றும் Hi-Res Audio தொழில்நுட்ப ஆதரவுடன் dual speakers உள்ளன. கூடுதலாக, in-display fingerprint சென்சாரும் உள்ளது. போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். இந்த போன் 161x75.7x8.7mm அளவீட்டையும், 199 கிராம் எடையையும் கொண்டதாகும். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.