வெளியானது Realme X2 Pro!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வெளியானது Realme X2 Pro!

full-HD+ Fluid டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது Realme X2 Pro

ஹைலைட்ஸ்
  • மூன்று விதமான RAM மற்றும் ஸ்டோரேஜுடன் வருகிறது Realme X2 Pro
  • Realme X2 Pro Master Edition, Brick மற்றும் Cement finishes-ல் வருகிறது
  • Realme X2 Pro இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகமாகும்

Realme X2 Pro தொடர்ச்சியான டீஸர்கள் மற்றும் வதந்திகளுக்குப் பிறகு 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை முறையாக வெளியிடப்பட்டது. முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் உள்ளே:

விலை மற்றும் அறிமுக விவரங்கள்: 

சீனாவில் Realme X2 Pro-வின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 2,699 (தோராயமாக ரூ .27,200) ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 2,899 (தோராயமாக ரூ .29,200)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 3,299 (தோராயமாக ரூ. 33,200) ஆகவும் விலைக் குறியைக் கொண்டுள்ளது. மூன்று வகைகளும் வெள்ளை மற்றும் நீல நிறங்களில் வந்துள்ளன. Realme X2 Pro அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வ Realme website, Jingdong, Tmall, மற்றும் Suning Tesco மூலம் சீனாவில் விற்பனைக்கு வரும். மேலும், அதன் முதல் விற்பனையின் போது தொலைபேசியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு CNY 100 (தோராயமாக ரூ. 1,000) தள்ளுபடி கிடைக்கும்.

realme x2 pro master edition Realme X2 Pro Master Edition

Realme X2 Pro Master Edition, Brick மற்றும் Cement finishes-ல் வருகிறது

சிறப்பம்சங்கள்: 

இரட்டை சிம் (நானோ) கொண்ட Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இதில், 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவுடன் 20:9 aspect ratio, 90Hz refresh rate மற்றும் 135Hz touch sampling rate ஆகிய அம்சங்கள் அடங்கும். கூடுதலாக in-display fingerprint சென்சார் உள்ளது. ஹூட்டின் படி, 6GB, 8GB மற்றும் 12GB of LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது. 64GB (dual-channel UFS 2.1), 128GB (UFS 3.0) மற்றும் 256GB (UFS 3.0) ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டதுதான் Realme X2 Pro.

கேமராவைப் பொறுத்தவரை, Realme X2 Pro-வில் quad rear கேமரா அமைப்பு உள்ளது. மேலும், six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel secondary sensor, f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle lens கொண்ட 8-megapixel tertiary sensor மற்றும் 2-megapixel depth sensor ஆகிய கேமரா அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. Realme X2 Pro-வில், செல்ஃபிக்களுக்காக f/2.0 lens உடன் முன்பக்கத்தில் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. portrait shots-ஐ முன் கேமரா ஆதரிக்கிறது. 

இணைப்பு விருப்பங்களில், 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். Dolby Atmos மற்றும் Hi-Res Audio technology ஆதரவுடன் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.

Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash Charge ஆதரவுடன், 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. இந்த போன் 161x75.7x8.7mm அளவீட்டையும் 199 கிராம் எடையையும் கொண்டது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.