இந்தியாவில் முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் “ரியல்மீ X”- விலை, ஆரம்ப ஆஃபர் விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் “ரியல்மீ X”- விலை, ஆரம்ப ஆஃபர் விவரம் உள்ளே!

இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வசதியும் X-ல் உள்ளது.

ஹைலைட்ஸ்
 • ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டு இந்த போன் செயல்படுகிறது
 • இந்த போனில் 16 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா உள்ளது
 • 48 மெகா பிக்சல் ரியர் கேமரா வசதியும் இருக்கிறது

ரியல்மீ X ஸ்மார்ட் போன் இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் அந்த போன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரியல்மீயின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்க உள்ளது ரியல்மீ X. ரியல்மீ சார்பில் வெளியிடப்பட்ட போன்களில், X-ல்தான் பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டு இந்த போன் செயல்படுகிறது. மேலும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வசதியும் X-ல் உள்ளது. 

ரியல்மீ X: விலை மற்றும் ஆஃபர்!

ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை (Polar White) மற்றும் நீலம் (Space Blue) என்ற இரு வண்ணங்களில் விற்பனையாக உள்ளது. 

ரியல்மீ தளம் மூலம், மொபிக்விக் பயன்படுத்தி, ரியல்மீ X-ஐ வாங்கினால் 10 சதவிகித கேஷ்-பேக் ஆக 1,500 ரூபாய் கொடுக்கப்படும். 7,000 ரூபாய் மதிப்புடைய ஜியோ ஆஃப்ர்களும் இருக்கிறது. 

ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்குபவர்களுக்கு நோ-காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷன் கொடுக்கப்படும். ஆக்சிஸ் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், 5 சதவிகிதம் கேஷ்-பேக் கொடுக்கப்படும். 

realmex body Realme X

Realme X, ஆக்டா கோர் குவால்கம் 710 எஸ் ஓ சி ப்ராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது

ரியல்மீ X: சிறப்பம்சங்கள்!

ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பைக் கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியைக் கொண்டுள்ளது. 4G வசதி, வை-ஃபை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 2. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
 3. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
 4. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
 5. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 6. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 7. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 8. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 9. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 10. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.