இந்தியாவில் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போன், ஸ்பைடர்-மேன் வெர்சனுடன் இந்த தேதியில் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போன், ஸ்பைடர்-மேன் வெர்சனுடன் இந்த தேதியில் அறிமுகம்!

'ரியல்மீ X' ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 அன்று அறிமுகமாகவுள்ளது

ஹைலைட்ஸ்
 • 'ரியல்மீ X' ஸ்மார்ட்போன் சுமார் 18,000 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகலாம்
 • இந்த ஸ்மார்ட்போன் ஸ்பைடர்-மேன் வெர்சனுடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது
 • ஸ்னேப்ட்ராகன் 710 ப்ராசஸர், 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது

இந்தியாவில் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகிறது என்ற தேதியை ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஸ்பைடர்-மேன் வெர்சனுடன் ஜூலை 15-ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. முன்னதாக சீனாவில் அறமுகமான இந்த ஸ்மார்ட்போன், 6.53-இன்ச் FHD+ திரை, ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 3765mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை கொன்டிருந்தது. சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மீ X-ன் ஸ்பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவில் மட்டுமே விற்பனையாகவுள்ளது. இதன் விற்பனை சீனாவில் ஜூலை 9 அன்று நடைபெரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

'ரியல்மீ X' அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வகைகள்!

ரியல்மீ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த 'ரியல்மீ X' ஸ்மார்ட்போன், இந்தியாவில் ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு மதியம் 12:30 மணிக்கு துவங்கும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ரியல்மீ நிறுவனம், 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ X': ஸ்பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போனை சில நாட்கள் முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலும் இந்த 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனுடன் இணைந்து பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் வெளியான 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனிலிருந்து வேறுபட்டிருக்கும் என, ரியல்மீ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் கூறியுள்ளார். ஜூலை 15-ல் இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழு தகவலும் வெளியாகவுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் சுமார் 18,000 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. மேலும், 'ரியல்மீ X', 'ரியல்மீ X': ஸ்பைடர்-மேன் வெர்சன் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து இந்தியாவிற்கென பிரத்யேகமான ஒரு சிறப்பு பதிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் எனவும் மாதவ் சேத் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சீனாவில் வெளியான இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வகைகளை கொண்டிருந்தது. அதில் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ X 1,499 யுவான்கள் (15,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையானது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,799 யுவான்கள் (18,100 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகிறது. இவற்றில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் மட்டுமே ஸ்பைடர்-மேன் வெர்சன் கொண்டு சீனாவில் அறிமுகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரியல்மீ X: சிறப்பம்சங்கள் (சீனாவில் வெளியான வகை)!

ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Oppo F11, Oppo F11 Pro-வின் விலை தடதட குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 2. பட்ஜெட் விலையில் விற்பனையைத் தொடங்கிய Oppo A5 2020- ஆஃபர் மற்றும் பிற விவரங்கள்!
 3. Flipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்!
 4. ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி! Airtel அதிரடி ஆஃபர்!
 5. டிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்ட Lenovo K10 Plus இந்தியாவில் ரிலீஸ்!
 6. WhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..?
 7. செப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..? - பரபர தகவல்கள்!
 8. Budget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது!!
 9. Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!
 10. டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.