பாப்-அப் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் கேமரா, 'ரியல்மீ X'-ன் விலை என்ன?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பாப்-அப் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் கேமரா, 'ரியல்மீ X'-ன் விலை என்ன?

ஸ்பைடர்-மேன் வெர்சனுடன் அறிமுகமான ரியல்மீ X ஸ்மார்ட்போன்

ஹைலைட்ஸ்
  • நாவோடோ புகாசாவா எடிசனும் அறிமுகமாகியுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 24 அன்று விற்பனையாகவுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போனுடன் 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது

இறுதியாக, ரியல்மீ X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 7 Pro, விவோ Z1 Pro, சாம்சங் கேலக்சி M40 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாப்-அப் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 6.53-இன்ச் FHD+ திரை, 3,765mAh பேட்டரி என்ற அளவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஸ்பைடர்-மேன் வெர்சன் மற்றும் நாவோடோ புகாசாவாவின் கார்லிக் மற்றும் ஆனியன் ஆகிய எடிசன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 900,000 பயன்பாட்டாளர்களை ரியல்மீ நிறுவனம் கொண்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் அறிவித்துள்ளார்.

ரியல்மீ X: விலை!

ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை (Polar White) மற்றும் நீலம் (Space Blue) என்ற இரு வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.

இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனை ஜூலை 24, மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.

அதுமட்டுமின்றி, ரியல்மீ நிறுவனம் ஜூலை 18 இரவு 8 மணிக்கு 'ஹேட் டூ வெய்ட்' என்ற ஒரு விற்பனையை நடத்தவுள்ளது. இது பற்றிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
 

சென்ற மாதம், 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் ஸ்பைடர்-மேன் வெர்சன் சீனாவில் அறிமுகமானது. அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 20,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாவோடோ புகாசாவாவின் கார்லிக் மற்றும் ஆனியன் ரியல்மீ X எடிசனும் 19,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த இரண்டு வெர்ஷனும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரியல்மீ X: சிறப்பம்சங்கள்!

ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.