ஜூலை 14 வரை 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனிற்கான 'ப்ளைண்ட்-ஆர்டர்' விற்பனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஜூலை 14 வரை 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனிற்கான 'ப்ளைண்ட்-ஆர்டர்' விற்பனை!

ரியல்மீ X ஸ்மார்ட்போன் ஜூலை 15-ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது

ஹைலைட்ஸ்
 • இந்த விற்பனை ஜூலை 14 வரை நடைபெறும்
 • 1000 ரூபாய் முன்பணம், 500 ரூபாய் தள்ளுபடி
 • தற்போது முன்பதிவு செய்தால், ஜூலை 22-ல் நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம்

இந்தியாவில் ரியல்மீ X ஸ்மார்ட்போன் ஜூலை 15-ல் அறிமுகமாகவுள்ளது. இன்னிலையில், அதற்கு முன்பு வரை இந்த ஸ்மார்ட்போனிற்கான 'ப்ளைண்ட்-ஆர்டர்' விற்பனையை அறிவித்துள்ளது ரியல்மீ நிறுவனம். ஜூலை 11-ல் துவங்கிய இந்த விற்பனை ஜூலை 14 வரை தொடரும். இதில் பதிவு செய்துகொள்பவர்கள் நிச்சயமாக ஜூலை 22-ல் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம் என ரியல்மீ நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

ரியல்மீ X ஸ்மார்ட்போனிற்கான 'ப்ளைண்ட்-ஆர்டர்' விற்பனை ஜூலை 11 மதியம் 12 மணிக்கு துவங்கியது. இந்த விற்பனை ரியல்மீ நிறுவனத்தின் தளத்தில் மட்டுமெ நடைபெறும். அதில், இந்த ஸ்மார்ட்போனை பெற 1,000 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், இந்த ஸ்மார்ட்போனை ஜூலை 22-ல் பெற்றுக்கொள்ளலாம். இந்த முறையில் வெரும் 2000 ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்பனையில் வைத்துள்ளது ரியல்மீ நிறுவனம். மேலும் 300 ஸ்பைடர்-மேன் வெர்ஷன் ரியல்மீ X ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. மேலும், இப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடியையும் வழங்கவுள்ளது. 

இங்கு முன்பதிவு செய்துகொண்டவர்கள், ஜூலை 22 மதியம் 12 மணியிலிருந்து ஜூலை 26 நள்ளிரவு 11:59-குள் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை இந்த ஸ்மார்ட்போனை முனபதிவு செய்துவிட்டு பெற விருப்பம் இல்லையென்றால், ஜூலை 22 மதியம் 12 மணிக்குள் அதை ரத்து செய்துகொள்ளலாம். முன்பதிவாக செலுத்தப்பட்ட பணம் ,ஜூலை 27-ல் திரும்ப வழங்கப்படும். 

இந்தியாவில் ஜூலை 15-ல் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், முன்னதாகவே சீனாவில் அறிமுகமானது.

ரியல்மீ X: சிறப்பம்சங்கள்! (சீனாவில் வெளியான வகை)

ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 2. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 3. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 4. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 5. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 6. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 7. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 8. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 9. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 10. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.