இந்தியாவில் இன்று அறிமுகமானது ரியல்மி யு1

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் இன்று அறிமுகமானது ரியல்மி யு1

ரியல்மி யு1-ன் விலை இன்று அறிவிக்கப்படும்.

ஹைலைட்ஸ்
  • ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரியல்மி யு1.
  • உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது
  • ரியல்மி யு1 பிரத்தியோகமாக அமேசான்.இன் –ல் விற்பனை செய்யப்படும்.

டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு ரியல்மி யு1 அறிமுகமாக உள்ளது. ரியல்மி யு1 பிரத்தியோகமாக அமேசான்.இன் –ல் விற்பனை செய்யப்படும்.

ரியல்மி யு1-ன் விலை

இந்தியாவில் ரியல்மி யு1ன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்று நடைபெறும் அறிமுக விழாவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான்.இன் மூலம் பிரத்தியோகமாக விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுக ஆஃபர்களும் அறிமுக விழாவில் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 1-ன் விலை ரூ.10,000 – 15,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 1-ன் முக்கியம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஹீலியோ பி70 அக்டோ கோர் SoCயினை அடிப்படையாகக் கொண்ட போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ப்ராஸ்சர் ARM மாலி ஜி72 MP3 ஜிபியுவினைக் கொண்டுள்ளது. டூயல் கேமரா செட்டப் உள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: हिंदी বাংলা
 
 

விளம்பரம்