3ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வசதியுடன் வெளியாகும் புதிய ரியல்மி யு1 - விலை விவரம்..!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
3ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வசதியுடன் வெளியாகும் புதிய ரியல்மி யு1 - விலை விவரம்..!

ரியல் யு1 (64ஜிபி, 3ஜிபி ரேம்) மாடலின் விலையானது ரூ.10,999 ஆகும்.

ஹைலைட்ஸ்
  • ரியல்மி யு1 புதிய வேரியண்ட்டில் 64ஜிபி நினைவகம் கொண்டுள்ளது
  • ஏப்.10ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.
  • அமேசான் மற்றும் ரியல்மி வெப்சைட்களில் இந்த போன் கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனமானது புதிய வேரியண்ட்டில் தனது ரியல்மி யு1 போனை வெளியிட்டுள்ளது. அதில் 3ஜி ரேம் மற்றும் மெமரி திறன் 64ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல்மி யு1 போனானது, இதுவரை 2 மெமரி வகைகளிலே வெளிவந்தது. அதாவது. 3ஜிபி+32ஜிபி மற்றும் 4ஜிபி+64ஜிபி வகைகளில் மட்டும் வெளிவந்தது.

இந்தநிலையில் புதிதாக ரியல்மி யு1 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த மாடலாகவும் இல்லாமல், கூடிய மாடலாகவும் இல்லாம் இடையிலான மாடலாக வெளிவந்துள்ளது. இதன் விலையானது ரூ.10,999 ஆகும். இந்த புதிய மாடல் வரும் ஏப்.10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

மெமரியை தவிர்த்து இதில் புதிதாக எந்த வேறுபாடும் இல்லை. இந்த ரியல்மி யு1 போனானது கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகமானது. அதன் விலையானது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலை ரூ.9,999 ஆகும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது ரூ.11.999 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும். அத்துடன் 6.3 ஃபுல் ஹெச்டி தன்மைகொண்ட எல்.இ.டி டிஸ்ப்ளே இதில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13 எம்பி மற்றும் 2 எம்பி என இரட்டை கேமராவை கொண்டுள்ளது. முன்புறம் 25 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன் 3,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி திறனும் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
  2. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
  3. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  4. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  5. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  6. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  7. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  8. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  9. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  10. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.