அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்!

ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஆகிய இரண்டு புதிய நான்கு கேமரா ஸ்மார்ட்போன்களை ரியல்மீ புதியதாக அறிமுகப்படுத்தியிருந்தது.

ஹைலைட்ஸ்
  • செயல்திறன், கேமராக்களில் கவனம் செலுத்த ரியல்மீயின் புதிய ஸ்மார்ட்போன்கள்
  • வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக அறிமுகமாகலாம்
  • நம்பகமான தகவல்கள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை

ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஆகிய இரண்டு புதிய நான்கு கேமரா ஸ்மார்ட்போன்களை ரியல்மீ புதியதாக அறிமுகப்படுத்தியிருந்தது. ரியல்மீ XT  எனப்படும் 64 மெகாபிக்சல் கேமராவை கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுக வரிசையில் உள்ளது என்பதை ரியல்மீ நிறுவனம் அறிவித்திருந்தது, ஆனால் ரியல்மீ நிறுவனம், இது மட்டுமின்றி அதிக சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தெரிகிறது. ரியல்மீயின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, சு குய் சேஸ் (Xu Qi Chase), அடுத்த வாரம் முற்றிலும் புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை உறுதி செய்துள்ளார். இது செயல்திறனை மையமாகக் கொண்டிருக்கும், இது ஒரு ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ப்ராஸசர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் என்பதை இந்த ஆண்டின் தொடக்கத்திலே அறிவித்திருந்தது.

சேஸ் தனது வெய்போ பதிவில் டீசர் ஒன்றை வெளியிட்டிருந்தார். வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் புதிய தொடர் அதிக செயல்திறனை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, மேலும் பயனர்கள் சிறந்த புகைப்படங்களைக் எடுக்கவும் உதவுகிறது. தற்போது, இந்த புதிய ரியல்மீ தொடர் ஸ்மார்ட்போன்கள் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது தெரியவில்லை, மேலும் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, குவால்காமின் சமீபத்திய முதன்மை சிப்செட் - ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் அவர்களின் ஸ்மார்ட்போன் ஒன்றைப் பயன்படுத்துவதாக டீசர் வெளியிட்டிருந்தது ரியல்மீ நிறுவனம். பிளாக் ஷார்க் மற்றும் நுபியா போன்ற சில பிராண்டுகள் ஏற்கனவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்-இயங்கும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள நிலையில், ரியல்மீ இதுபோன்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மறைத்து வைத்திருக்கிறது.

ரியல்மின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி புதிய ஸ்மார்ட்போன் தொடரின் அறிமுகத்தை டீசர் மூலம் வெளியிட்டுள்ளதால், மீடியாடெக்கின் கேமிங் சென்ட்ரிக் ஹீலியோ ஜி 90 மற்றும் ஹீலியோ ஜி 90 டி சிப்செட்களால் இயக்கப்படும் பல ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். அதிகாரப்பூர்வ ரியல்மீ வெய்போ கணக்கு அதன் சந்தைப்படுத்தல் நிர்வாகி பதிவை பகிர்ந்துள்ளது, மேலும் ஒரு புதிய தொலைபேசி தொடர் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.