64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீ ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதலில் அறிமுகம்!

64 மெகாபிக்சல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஹைலைட்ஸ்
 • 64 மெகாபிக்சல் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ட்விட்டரில் பதிவு
 • இந்த கேமரா பொருத்தப்பட்ட ரியல்மீ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்,
 • சாம்சங் இந்த சென்சாரை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது

64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்த ரியல்மீயின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் சேத், இந்த சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகும் ஸ்மார்ட்போன் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறியுள்ளார். சமீபத்தில் சீனாவில் தன் தயாரிப்புகளான ரியல்மீ X மற்றும் ரியல்மீ X லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதற்கு பின், ரியல்மீ நிறுவனம் வெளியிடும் அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்கின் 64 மெகாபிக்சல் மூலம் எடுக்கப்பட்ட ஒரு லேட்ஸ்கேப் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் மாதவ் சேத். அந்த பதிவில் இந்த கேமரா சென்சார் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதலில் அறிமுகமாகவுள்ளது என்ற தகவலை உறுதி செய்துள்ளார்.

64 மெகாபிக்சல் அளவிலான இந்த கேமரா சென்சார், ஒளி குறைந்த நேரங்களில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பம் மூலம் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும்.

இதுமட்டுமின்றி, 2019-ல் 5G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக முன்னதாகவே ரியல்மீ நிறுவனம் அறிவித்திருந்தது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க!
 2. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’!
 3. 64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மீ போன்… முழு விவரம் உள்ளே!
 4. இந்தியாவில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் அறிமுகம்?
 5. விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 6. ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது!
 7. விற்பனையில் ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!
 8. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 9. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 10. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.