ஆகஸ்ட் 15-ல் அறிமுகமாகிறது 64 மெகாபிக்சல் கேமரா போன், ரியல்மீ நிறுவனத்தின் அதிரடி!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஆகஸ்ட் 15-ல் அறிமுகமாகிறது 64 மெகாபிக்சல் கேமரா போன், ரியல்மீ நிறுவனத்தின் அதிரடி!

Photo Credit: Weibo

இந்த 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த வாரத்தில் அறிமுகமாகவுள்ளது

ஹைலைட்ஸ்
 • ரியல்மீ இந்த தகவலை வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது
 • இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 8-ல் இந்தியாவில் அறிமுகம்
 • இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் வெளியாகவில்லை

64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்பதை ரியல்மீ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியாவில் முதலில் காட்சிப்படுத்தப்படவிருக்கும் இந்த தொழில்நுட்பம், ஒரு வாரத்திற்குப்பின் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த ரியல்மீ நிறுவனம் தயாராக உள்ளது. 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா அமைப்பு இருக்கும் என்று ரியல்மீ நிறுவனம் வெளியிட்டுள்ள தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் GW1 சென்சாரை ரியல்மீ நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதுவரை நிறுவனத்தின் பக்கத்திலிருந்து எந்த ஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானவுடன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்த சீன நிறுவனம் தனது வெய்போ கணக்கில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக ரியல்மீ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா அமைப்பு இருக்கும் என்பதை மீண்டும் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ரியல்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் என்ன என்பது இன்னும் ஒரு மர்மமாக இருக்கிறது. இது X-தொடரின் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்குமா அல்லது புதிய ‘கேமரா-மையப்படுத்தப்பட்ட' தொடரை அறிமுகப்படுத்துமா என்பது தெரியவில்லை. ரியல்மீ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத்தும் இந்த புதிய ஸ்மார்ட்போனைப் பெறும் முதல் நாடு இந்தியா என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் GW1 சென்சாரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மீ சாம்சங் சென்சாரைப் பயன்படுத்தினால், வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறைந்த ஒளி நிலையில் 16 மெகாபிக்சல் அளவிலான படங்களை எடுக்கும் திறனை கொண்டிருக்கும். 

வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போனின் பிற விவரங்கள் குறைவாகவே வெளியாகவுள்ளது, ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் அதன் அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனம் அனைத்து விவரங்களையும் வெளியிடவுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 2. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
 3. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!
 4. அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!
 5. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 6. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 7. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 8. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 9. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 10. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.