4 கேமராக்களுடன் இந்தியாவில் 'ரியல்மீ 5' தொடர் ஸ்மார்ட்போன்கள், எப்போது அறிமுகம்?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
4 கேமராக்களுடன் இந்தியாவில் 'ரியல்மீ 5' தொடர் ஸ்மார்ட்போன்கள், எப்போது அறிமுகம்?

Photo Credit: Flipkart

இந்த ரியல்மீ ஸ்மார்ட்போனிற்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது தளத்தில் ஒரு பிரத்யேக பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஆகஸ்ட் 22, மதியம் 12:30 அன்று அறிமுகமாகவுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் 4 கேமராக்களை கொண்டுள்ளது
  • முன்னதாக 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது

ரியல்மீ நிறுவனம், நான்கு கேமரா கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது, இதை உறுதி செய்வதற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது தளத்தில் ஒரு பிரத்யேக பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மீ நிறுவனத்தில் இந்த  புதிய ரியல்மீ 5-சீரிஸ் ஸ்மார்ட்போன், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டிருக்கும் என அந்த நிறுவனம் சமீபத்தில் டீஸர் வெளியிட்டிருந்தது. சாம்சங் ஐசோசெல் பிரைட் ஜி.டபிள்யூ 1 பட சென்சார் கொண்ட தனது முதல் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை வெளியிட்ட சில நாட்களிலேயே இந்த புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரியல்மீ நிறுவனம் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.

ரியல்மீ 5-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக ஃப்ளிப்கார்ட்டில் உள்ள ப்ரத்யேக பக்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு அன்று மதியம் 12:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அறிமுகத்தை உறுதிப்படுத்துவதோடு, வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன் "பெரிய பிக்சல் அளவு" மற்றும் "பெரிய துளை" லென்ஸ் முதன்மை சென்சாருடன் வரும் என்பதை பிரத்யேக பக்கம் சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 119 டிகிரி விரிந்த வைட்-ஆங்கிள் சென்சார், 4 செ.மீ குவிய நீளம் கொண்ட சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும்நான்காவதாக போர்ட்ரைட் லென்ஸ் சென்சார் ஆகியவை இருக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃப்ளிப்கார்ட் கூடுதலாக இந்த ஸ்மார்ட்பொனிற்கு டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்த டீஸர் வரவிருக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போனின் பின்புறத்தைக் காட்டுகிறது - குறிப்பாக நான்கு பின்புற கேமரா அமைப்பு, எல்இடி ஃபிளாஷ் ஆகியவை.

கடந்த வாரம், ரியல்மீ நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. சாம்சங் ஐசோசெல் பிரைட் ஜி.டபிள்யூ 1 பட சென்சாரைப் பயன்படுத்தியதாகவும் நிறுவனம் அறிவித்தது. சாம்சங் மற்றும் சியோமி ஆகியவை தங்கள் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்களில் இதே சென்சாரைத்தான் பயன்படுத்துகிறது. மேலும், புதிய சென்சார் கொண்ட ரியல்மீ ஸ்மார்ட்போன் அப்படியே ரியல்மீ X-ன் மேம்படுத்தப்பட்ட ரியல்மீ X Pro-வாக அறிமுகமாகலாம்.

கடந்த வாரம் புதுடில்லியில் தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை வெளிக்காட்டியபோது, ​​ரியல்மீ இரண்டு கூடுதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பதை குறிப்பிட்டது. அந்த மாடல்களில் ஒன்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியயவ் அறிமுகமாகும் ரியல்மீ 5-சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.