அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!

ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • ரியல்மீ 5 ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டிருக்கலாம்
  • இதன் விலை 10,000 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்
  • ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0-உடன் வெளியாகவுள்ளது

4 பின்புற கேமராக்கள், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில், ரியல்மீ நிறுவனம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் நாளை (ஆகஸ்ட் 20) இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் நாளை ஒரு நிகழ்வில் அறிமுகமாகவுள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த தகவல்கள் இதோ!

ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள்: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை!

ஆகஸ்ட் 20-ஆன நாளை ரியல்மீ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களான ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வில் ரியல்மீ பட்ஸின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான 'ரியல்மீ பட்ஸ் 2' இயர்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னதாக ரியல்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதவ் சேத். ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ளது என குறிப்பிட்டிருந்தார். ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிய வண்ணம் இல்லை.

ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள்: சிறப்பம்சங்கள்!

ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் பற்றி பார்க்கையில் 4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 4 கேமராக்களுடன் 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும், மற்ற 3 கேமராக்களும் ரியல்மீ 5 Pro போன்றே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

realme5 body Realme 5

இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டிருக்கும் என்ற தகவளுக்கு மாறாக இந்த ஸ்மார்ட்போன்களின் விளம்பரத்தில், தெளிவாக பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றிருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது. மேலும், 30 நிமிடத்தில் 55 சதவிகிதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் பேட்டரி வசதி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

கீக்பென்ச் (Geekbench) தளத்தில் வெளியான தகவலின்படி ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி கொண்டிருக்கும் என குறிப்பிடுகிறது.

மறுபுறத்தில் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்  ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. 2020 iPhone மாடல்களில் பெரிய பேட்டரியா...? முழுசா தெரிஞ்சுக்கோங்க!
  2. டூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G!
  3. Vivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம்! விலை, விற்பனை சலுகைகள் இதோ...
  4. இனி Balance & Signal வேண்டாம், ஆனால் கால் பண்ண முடியும் - Airtel-ன் சரவெடி திட்டம்!
  5. 8GB RAM, Intel Core Processors உடன் வெளியானது RedmiBook 13! 
  6. லீக் ஆனது Realme-யின் 'Air Pods' விலை விவரம் - எவ்ளோனு தெரிஞ்சா அசந்துபோயிடுவீங்க..!
  7. Flipkart-ல் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த Realme 5s! 
  8. இந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8! 
  9. போட்டிக்கு போட்டி! வெறும் 98 ரூபாய்க்கு அதிரடி ரீசாஜ் ப்ளானை அறிவித்த ஜியோ!
  10. Vodafone Idea-வின் அதிரடி... குறைந்த விலையில் அறிமுகமான ரீசார்ஜ் பிளான்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.