48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!

ரியல்மீ 5 Pro பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • ரியல்மீ 5 Pro ஃப்ளிப்கார்ட்டில் விற்பனையாகவுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 20, மதியம் 12:30 மணிக்கு அறிமுகமாகவுள்ளது
  • ரியல்மீ 5 ஸ்மார்ட்போனும் இதனுடன் அறிமுகமாகவுள்ளது

ரியல்மீ 5 தொடரின், ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த தகவலை ரியல்மீ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் 4 கேமராக்களை கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. ரியல்மீ நிறுவனம், தனது 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது சமீபத்திய அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவையே கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

4 கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாஇவ்ல் ஆகஸ்ட் 20 அன்று மதியம் 12:30 மணிக்கு துவங்கவுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

மற்றொரு தனி பதிவில், இந்த ஸ்மார்ட்போனுடன் ரியல்மீ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான ஒரு பிரத்யேக பக்கம் ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்து பெரிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஃப்ளிப்கார்ட் பக்கத்தில் இந்த ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு 119 டிகிரி விரிந்த புகைப்படங்களை எடுக்கக்கூடிய அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு 4cm மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த மற்ற தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அனைவரும் இந்த ரியல்மீ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மீ நிறுவனம் தீபாவளிக்கு முன்னதாக தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.