'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

மீடியாடெக் ஹீலியோ P60 எஸ் ஓ சி ப்ராஸசர் கொண்டுள்ளது இந்த 'ரியல்மீ 3i'

ஹைலைட்ஸ்
  • 'ரியல்மீ 3i' மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது
  • 13 மற்றும் 2 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.

சமீபத்தில் தன் நிறுவனத்தின் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனுடன், 'ரியல்மீ 3i' என ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனையும் கடந்த வாரத்தில் அறிமுகம் செய்திருந்தது. ரியல்மீ 3-யின் சற்று மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷன் போலவே அமைந்திருந்த இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று நடைபெறும் என முன்னதாகவே ரியல்மீ நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு இந்த விற்பனை நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது. இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமரா,டியூட்ராப் திரை, மீடியாடெக் ஹீலியோ P60 எஸ் ஓ சி ப்ராஸசர், 4,230mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா என பல சிறப்பம்சங்களை  கொண்டுள்ளது.

'ரியல்மீ 3i': விலை!

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 23-றான இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.

ரியல்மீ 3i: சிறப்பம்சங்கள்!

ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, 19:9  திரை விகிதம், 88.30 சதவிகித திரை-உடல் விகிதம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.