இன்று வெளியாகவுள்ள ரியல்மீ 3 Pro: ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro, எது சிறந்தது?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இன்று வெளியாகவுள்ள ரியல்மீ 3 Pro: ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro, எது சிறந்தது?

இந்தியாவில் ரியல்மீ 3 Pro மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஸ்மார்ட்போன்கள், ரூபாய் 13,999 விலையிலிருந்தே துவங்குகிறது.

ஹைலைட்ஸ்
 • ரியல்மீ 3 Pro-வின் ஆரம்ப விலை ரூபாய் 13,999
 • ரெட்மீ நோட் 7 Pro 48 மேகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது
 • ரியல்மீ 3 Pro-வில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர், 4,045mAh பேட்டரி


இறுதியாக ரியல்மீ 3 Pro இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேலில் விற்பனைக்கு வரவுள்ளது. அப்படி வெளியாகவுள்ள இந்த ரியல்மீ 3 Pro அண்ட்ராய்ட் பை (Android Pie) அமைப்பு கொண்டு வெளியாகவுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பின்புற கேமராக்கள், 6.3-இன்ச் நீலம் கொண்ட திரை, போன்ற சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில் கேமராவை மையமாக வைத்து பல அம்சங்கள் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் செயல்படும், நைட்ஸ்கேப் (Nightscape Mode), குறைந்த ஒளியிலும் சிறப்பான படங்கள், என கேமராக்களுக்காக இன்னும் பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை வைத்துப் பார்க்கையில், இது ரெட்மீ நிறுவனத்தின் ரெட்மீ நோட் 7 Pro ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீ நிறுவனம் வெளியிடவுள்ளது போல தெரிகிறது.

அன்மையில் ரெட்மீ நிறுவனம், தனது ஸ்மார்ட்போனான நோட் 7 Pro-வை வெளியிட்டுள்ளது. தற்போது ,ரியல்மீ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனான ரியல்மீ 3 Pro-வை வெளியிடவுள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போனை நீங்கள் பெறலாம், எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro, ஒரு ஒப்பீடு!

ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro: விலை!

இந்தியாவில் ரியல்மீ 3 Pro-வின் விலை 13,999 ரூபாயிலிருந்தே துவங்குகிறது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro-வின் விலை ரூபாய் 13,999. அதேபோல,6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro-வின் விலை 16,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ ப்ளூ, மற்றும் ஊதா ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். ரெட்மீ நிறுவனமும், தன் ஸ்மார்ட்போனான ரெட்மீ நோட் 7 Pro-வை இதே விலைகளில் தான் விற்பனை செய்து வருகிறது.

4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரெட்மீ நோட் 7 Pro-வின் விலை ரூபாய் 13,999. அதேபோல,6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro-வின் விலை 16,999 ரூபாய். விலையில் வேறுபடாத இந்த ரெட்மீ நோட் 7 Pro சிவப்பு(Nebula Red), நீலம்(Neptune Blue), மற்றும் கருப்பு(Space Black) ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களை கொண்டு இயங்கும் ரியல்மீ 3 Pro, அண்ட்ராய்ட் பை அமைப்பு கொண்டு இயங்குகிறது, இதில் கலர் ஓ எஸ் 6.0 பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரம், இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் பை அமைப்பு கொண்டு இயங்கும்,  ரெட்மீ நோட் 7 Pro-வில் MIUI 10 அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 

இவை இரண்டின் திரை அம்சங்கள் பற்றி விவாதிக்கையில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, 6.3-இன்ச் அளவு FHD+ திரையை கொண்டுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்திலேயே, இரண்டு மொபைல்போன்களின் திரையும் அமைக்கப்பட்டுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கையில், ரியல்மீ 3 Pro-வில் 2.5D கர்வ்டு கிளாஸ்(2.5D curved glass) பாதுகாப்புடைய கொரில்லா கிளாஸ் 5 கொண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், என்ன ப்ராசஸர் கொண்டு இந்த இரு ஸ்மார்ட்போன்களும் செயல்படுகிறது என்று பார்த்தால், ரியல்மீ 3 Pro குவல்காம்-ன் ஸ்னேப்ட்ராகன் 710எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. ஆனால், ரெட்மீ நோட் 7 Pro-வில் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸரே பொருத்தப்பட்டுள்ளது. 

ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro: கேமரா!

கேமரா வசதி பற்றி விவாதிக்கையில், பின்புற கேமராவை ஒப்பிடுகையில் ரெட்மீ நோட் 7 Pro, ரியல்மீ 3 Pro-வை விட சற்று சிறந்தே இருக்கிறது. இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட ரெட்மீ நோட் 7 Pro, 48 மெகா பிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என அளவுகளை கொண்டுள்ளது. ஆனால், ரியல்மீ 3 Pro-வில் 13 மெகாபிக்சல்கல் மற்றும் 5 மெகாபிக்சல்கள் என்ற அளவிலேயே இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பின்புற கேமரா வசதியில் பின்தங்கியிருந்த ரியல்மீ 3 Pro, அதனை முன்புற செல்பி கேமரா அளவில் ஈடுசெய்துள்ளது. 13 மேகாபிகசல்கள் மட்டுமே கொண்டு வெளிவருகிறது ரெட்மீ நோட் 7 Pro-வின் செல்பி கேமராக்கள். ஆனால், ரியல்மீ 3 Pro-வில் 25 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்பிகளை அதிகம் விரும்புவோருக்கு, ரியல்மீ 3 Pro ஒரு நல்ல ஸ்மார்ட்போனாக அமையலாம்.

ரியல்மீ 3 Pro vs ரெட்மீ நோட் 7 Pro: பேட்டரி!

ரியல்மீ 3 Pro 4,045mAh பேட்டரி வசதி கொண்டு வெளிவருகிறது. அதே நேரத்தில் ரெட்மீ நோட் 7 Pro-வும் 4,000mAh என்ற பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போனிலும் அதிவேக சார்ஜ் வசதி உள்ளது.

156.8x74.2x8.3 mm என்ற அளவை கொண்ட ரியல்மீ 3 Pro, 172 கிராம் எடை கொண்டுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro-வோ 159.21x75.21x8.1mm அளவும் 186 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் 4G மற்றும் வை-பை வசதி உள்ளது. ரியல்மீ 3 Pro ப்ளூடூத் v4.2 கொண்டும், ரெட்மீ நோட் 7 Pro ப்ளூடூத் v5.0 கொண்டும் வெளியாகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.

ரியல்மீ 3 Pro: எங்கு, எப்போது, எப்படி பெறலாம்?

ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு ப்ளாஷ் சேலிற்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்பொனை இந்த சேல், ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ-யின் தளங்களில் நடைபெறவுள்ளது. மதியம் 12 மணிக்கு துவங்க உள்ள இந்த  ப்ளாஷ் சேலில், இந்த இரண்டு தளங்களில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை பெறலாம். குறைந்த அளவிலான ஸ்மார்ட்போன்களையே விற்பனைக்கு வைக்கவுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை பெற விரும்பூவோர் முதலில் செல்வது அவசியம்.


Realme 3 Pro vs Redmi Note 7 Pro: Which one is the winner? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. OS அப்டேட் பெறும் Realme C2! 
 2. 6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Nokia 2.3! 
 3. 14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2! 
 4. 55-Inch 4K UHD திரையுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Nokia Smart TV!
 5. Lenovo Smart Display 7, Smart Bulb மற்றும் Smart Camera இந்தியாவில் அறிமுகம்!
 6. அசத்தலான அம்சங்களுடன் வருகிறது Motorola One Hyper!
 7. Amazon, Vivo.com வழியாக இன்று விற்பனைக்கு வரும் Vivo U20! விலை, விவரங்கள், சலுகைகள் இதோ உங்களுக்காக....
 8. Flipkart, Realme.com மூலம் இன்று விற்பனைக்கு வருகிறது Realme 5s! சலுகைகள், விவரங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
 9. "உச்சத்தை எட்டிய விலை...." - Jio ரீசார்ஜ் பிளான் கட்டணங்கள் கிடுகிடு உயர்வு!
 10. 64-மெகாபிக்சல் கேமராவுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Redmi K30!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.