இன்று வெளியாகிறது ‘ரியல்மி 3 ப்ரோ’… அனைத்து விவரங்களும் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இன்று வெளியாகிறது ‘ரியல்மி 3 ப்ரோ’… அனைத்து விவரங்களும் உள்ளே!

இன்று 12:30 மணி அளவில் ரியல்மி 3 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது

ஹைலைட்ஸ்
 • ரியல்மி 3 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோ-வுடன் போட்டியிடும்
 • ரெட்மி நோட் 7 ப்ரோ விலையை ரியல்மி 3 ப்ரோ ஒத்திருக்கலாம்
 • ரியல்மி 3 ப்ரோ, ஃபோர்ட்நைட் கேமிங் சப்போர்ட் உடன் வருகிறது

இன்று புது டெல்லியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் ‘ரியல்மி 3 ப்ரோ' ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்ற மாதம் ரியல்மி 3 போன் வெளியீட்டின் போது, ரியல்மி 3 ப்ரோ குறித்து முதன்முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை இந்த போன் குறித்து சொல்லிக் கொள்ளும்படி தகவல்கள் வரவில்லை. நிறுவனம் சார்பில் சில டீசர்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ரியல்மி 3 ப்ரோ போன், ரெட்மி நோட் 7 ப்ரோ போனுடன் சந்தையில் போட்டியிடும் என்பது மட்டும் உறுதி. ரெட்மி நோட் 7 ப்ரோவின் விலை 20,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரியல்மி 3 ப்ரோ நேரலை:

இன்று 12:30 மணி அளவில் ரியல்மி 3 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த விழாவை, ரியல்மி நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யும். ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும்தான் இந்த போன் கிடைக்கும் என்பது ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. 
 

ரியல்மி 3 ப்ரோ விலை:

போனின் விலை குறித்து இன்றுதான் நமக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும். ஆனால், ரெட்மி நோட் 7 ப்ரோ போனுடன் இந்த போன் போட்டிபோடும் என்று தெரிகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ, 13,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அதேபோல ரியல்மி 3 ப்ரோ, ரியல்மி 2 ப்ரோவின் விலையை ஒத்திருக்கலாம். அந்த போனின் விலை 13,990 ரூபாய்க்கு ஆரம்பிக்கிறது. 

எந்தெந்த வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் ரியல்மி 3, டைனமிக் கருப்பு, ரேடியன்ட் நீலம், க்ளாசிக் கருப்பு நிறங்களில் கிடைத்தன. ரியல்மி 3 ப்ரோ-வும் இந்த வகைகளில் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி-யை ரியல்மி 3 ப்ரோ பெற்றிருக்கலாம் எனப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பைய் மூலம் இந்த போன் இயங்க வாய்ப்புள்ளது. ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட் உடன் வரும் இந்த போன், சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோவிற்கு போட்டியாக சந்தையில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

6ஜிபி ரேமுடன் இந்த போன் இயங்கும் என கீக்பென்ச் தளம் கூறுகின்றது. மேலும் போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே மற்றும் 3,960 எம்.ஏ.எச் பேட்டரி வசதியுடன் ரியல்மி 3 ப்ரோ சந்தைக்கு வரலாம். 5GHz வை-ஃபை இணைப்பு ப்ளூடூத், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கக்கூடும். 
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 2. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 3. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 4. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 5. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 6. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 7. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 8. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 9. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 10. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.