‘ரியல்மீ 3 ப்ரோ’ வெளியாகும் தேதி மற்றும் சுடசுட தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
‘ரியல்மீ 3 ப்ரோ’ வெளியாகும் தேதி மற்றும் சுடசுட தகவல்கள்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரும் ஏப்ரல் 22,  மதியம்12:30 மணி அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் ரியல்மீ 3 ப்ரோ வெளியிடப்பட உள்ளது. 

ஹைலைட்ஸ்
 • ட்விட்டர் மூலம் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
 • ஃபோர்ட்நைட் கேமிற்கு இந்த போனில் சப்போர்ட் இருக்கும் எனப்படுகிறது
 • இந்த போன் குறித்து சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது

ரியல்மீ 3 ப்ரோ ஸ்மார்ட் போன், இந்தியவில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்து பேசியுள்ள ரியல்மீ சி.இ.ஓ மாதவ் ஷேத், ‘இந்த வகை போன் பிரிவில் ‘ஃபோர்ட்நைட்' சப்போர்ட் கொண்டு வரும் முதல் போன் ரியல்மீ 3 தான்' என்று கூறியுள்ளார். சியோமி நோட் 7 ப்ரோ-விற்கு எதிராக இந்த போன் சந்தையில் இறக்கிவிடப்படுகிறது. சென்ற மாதம் ரியல்மீ 3 வெளியிடப்பட்டபோது, ரியல்மீ 3 ப்ரோ போன் குறித்து அறிவிக்கப்பட்டது. 

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரும் ஏப்ரல் 22,  மதியம்12:30 மணி அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் ரியல்மீ 3 ப்ரோ வெளியிடப்பட உள்ளது. 

இந்த போன் கேமிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், ‘ஃபோர்ட்நைட்' கேமிற்கு சப்போர்ட் கொடுக்கும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேத் தனது ட்வீட்டில், ரெட்மி நோட் 7 ப்ரோ குறித்தும் கேலி செய்யும் வகையில், ‘சமீபத்தில் வெளியான ‘ப்ரோ' போனில் வீடியோ கேம் விளையாட முயன்று அலுத்துப் போய்விட்டீர்களா. வேகம் என்று வரும்போது, நாங்கள்தான் கெத்து' என்று பதிவிட்டுள்ளார். 

ரியல்மீ 3 ப்ரோ-வின் சிறப்பம்சமான ‘சிப்செட்' குறித்து இதுவரை எந்தவித தகவலும் கசியவில்லை. ஆனால், போனில் 48 மெகா பிக்சல் திறன் கொண்ட முதன்மை சென்சார் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஷேத் சமீபத்தில் ட்வீட்டியதில், மூன்று கேமரா வகைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் ஒரு கேமரா, ரியல்மீ 3 ப்ரோ-வில் வரும் செல்ஃபியும், மற்ற இரண்டு பின்புற கேமரா சாம்பிளாக இருக்கும் எனப்படுகிறது. செல்ஃபி கேமராவின் திறன் 13 மெகா பிக்சலை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2! 
 2. 55-Inch 4K UHD திரையுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Nokia Smart TV!
 3. Lenovo Smart Display 7, Smart Bulb மற்றும் Smart Camera இந்தியாவில் அறிமுகம்!
 4. அசத்தலான அம்சங்களுடன் வருகிறது Motorola One Hyper!
 5. Amazon, Vivo.com வழியாக இன்று விற்பனைக்கு வரும் Vivo U20! விலை, விவரங்கள், சலுகைகள் இதோ உங்களுக்காக....
 6. Flipkart, Realme.com மூலம் இன்று விற்பனைக்கு வருகிறது Realme 5s! சலுகைகள், விவரங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
 7. "உச்சத்தை எட்டிய விலை...." - Jio ரீசார்ஜ் பிளான் கட்டணங்கள் கிடுகிடு உயர்வு!
 8. 64-மெகாபிக்சல் கேமராவுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Redmi K30!
 9. எப்போதும் Realme தான் ஃப்ஸ்ட்! வரவிருக்கும் புது ஸ்மார்ட்போன் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
 10. டிசம்பர் 11-ல் Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை! Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வாங்கலாம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.