இந்தியாவில் வெளியான ரியல்மி 3! தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் வெளியான ரியல்மி 3! தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

ரியல்மி 3 வரும் மார்ச் 12 முதல் விற்பனைக்கு வரவுள்ளது!

ஹைலைட்ஸ்
  • Realme 3 camera setup includes two rear sensors
  • The Realme 3 will be available on Flipkart, with first sale on March 12
  • Realme 3 price in India starts at Rs. 8,999

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தயாரிப்பு தனது முந்தைய வெளியீடான ரியல்மி 2 ஸ்மார்ட்போனிலிருந்து கேமரா மற்றும் முகப்பு டிசைன் மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுராய்டு 9 பைய் மென்பொருள் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. 
 

ரியல்மி 3 விலை மற்றும் வெளயீடு தேதி:
இந்தியாவில் (3ஜிபி ரேம், 32ஜிபி சேமிப்பு வசதியுள்ள) தயாரிப்பு ரூ.8,999க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன், பட்ஜெட் போன்களை விரும்புவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இது போன்று 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ஸ்மார்ட்போன் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. டைனமிக் பிளாக், ரேடியன்ட் புளூ மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவை பொருத்தவரை இந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் வற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட சேல் வரும் மார்ச் 12 மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் இருக்கும் ரேடியன்ட் புளூ வகை ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 26 ஆம் தேதியே வெளியாகவுள்ளது. அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.
 

 

relame3 main1 Realme 3

 ரியல்மி 3 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்ட் வசதி, கலர் ஓஸ் மற்றும் ஆண்டுராய்டு பைய் மென்பொருள் என பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் ஹெச்டி திரையும் பெற்றுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.1 ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ SoC-யுடன் வெளியாகியுள்ளது. 3 மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தனது பிரமாண்டமான இரண்டு பின்புற கேமராக்களுடன் வெளியாகியுள்ளது. 

13/2 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ள நிலையில், ஹெச்டிஆர், ஃபேஸ் ஆன்லாக் போன்ற சிறப்பு அம்சங்களும் உள்ளனர். பேட்டரி வசதியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4,230mAhவுடன் வெளியாகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.