தள்ளுபடி விற்பனையில் 'ரியல்மி' போன்கள்; ஆஃபர்கள் பற்றிய முழு தகவல்கள்...

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
தள்ளுபடி விற்பனையில் 'ரியல்மி' போன்கள்; ஆஃபர்கள் பற்றிய முழு தகவல்கள்...

இந்த சேல் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறுகிறது!

ஹைலைட்ஸ்
  • ரியல்மி சேல் ஒரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் துவக்கம்!
  • இலவசமாக ரியல்மி பட்ஸ் வழங்கப்படுகிறது.
  • இந்த சேலில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனும் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற முக்கிய ஆஃபர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ரியல்மி 3 தயாரிப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை முதல் 'ரியல்மி யோ டேஸ் சேல்' நடைபெறவுள்ள நிலையில் முக்கிய ரியல்மி தயாரிப்புகளான ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 போன்கள் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் பெருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த சேல் நடைபெறுகின்ற நிலையில் இந்த தள்ளுபடி சேல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் இந்த சேலில் ரியல்மி 2 ப்ரோ தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால ஆஃபராக ரியல்மி பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேலில் ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ரியல்மி 3 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வெளியாகுகிறது.

தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் இந்த 'ரியல்மி யோ டேஸ் சேல்' மூலம் ரியல்மி 2 ப்ரோ போன்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஃபிளிப்கார்டில் முன்னரே பணத்தை செலுத்தி இந்த தயாரிப்பை வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு ரியல்மி 2 ப்ரோ போனை வாங்குபவர்களுக்கு இலவசமாக ரியல்மி பட்ஸ் கிடைக்கிறது. தற்போது இந்த ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இதே போனின் 6ஜிபி ரேம்/மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மாடல் ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் தளத்திலும் நடைபெறும் இந்த 'ரியல்மி யோ டேஸ் சேல்' ரியல்மி யு1 போனிற்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசிதிகொண்ட மாடல் ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இதே போனின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சேலில் இடம்பெற்றுள்ள ஃபிளாஷ் சேல் மூலம் டெக் பேக்பேக் ரூ.1 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூப்பர் சேல் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு நடைபெறுகிறது. அதுபோல் இந்த ஃபிளாஷ் விற்பனை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுபோன்ற முக்கிய ஆஃபர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 முதல் ரியல்மி 3 தயாரிப்பு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியீட்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.