பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி- 2 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி- 2 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மி2 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் இன்று அறிமுகமானது

கடந்த மாதம், ஸ்மார்ட் போன் சந்தையில் புதிதாக அறிமுகமான ரியல்மி 2 போன்கள் வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

ரியல்மி 2 ப்ரோ விலை

4ஜிபி RAM/ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 2 ப்ரோ போன், 13,990 ரூபாய்க்கும், 6ஜிபி RAM/ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 15,990 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது. மேலும், 8ஜிபி RAM/ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது 17,990 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. அக்டோபர் 11-ம் தேதி, நள்ளிரவு 12 மணி முதல் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் ப்ளிப்கார்ட்டில் விற்பனையாக உள்ளன. ப்ளாக் சீ, ப்ளூ ஓஷன், ஐஸ் லேக் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளன

ரியல்மி 2 ப்ரோ குறிப்புகள்

டூயல் சிம் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்கள், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பம் கொண்டு செயல்படுகிறது. போன் ஸ்க்ரீன் 6.3 இன்ச் (1080x2340) பிக்சல்ஸ், ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே, 19:5:9 ரேசியோ ஆகியவை கொண்டுள்ளது. 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி உள்ளது

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன் கேமரா பொறுத்தவரை, 16 மெகா-பிக்சல் சென்சார், f/1.7 அபெர்சர், 6P லென்ஸ், ஆகியவை கொண்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது. மேலும், 2 மெகா-பிக்சல் செகண்டரி கேமரா இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, 16 மெகா-பிக்சல் ப்ரண்ட் கேமரா, f/2.0 அபெர்சர் கொண்டுள்ளது. சிறந்த செல்ஃபி போட்டோ அனுபவத்தை அளிக்கும் அல் 2.0 வசதியும் இடம் பெற்றுள்ளது.

சென்சார்களை பொறுத்தவரை, ஆக்சலரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார் ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும், 3,500mAh பவர் பாக்ட் பாட்டிரி இடம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. USB OTG, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத், 4G VoLTE, ஜிபிஎஸ் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.