இந்த ஸ்மார்ட்போன் விலையெல்லாம் குறையப்போகுதாம், விவரம் தெரிஞ்சுக்கோங்க!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்த ஸ்மார்ட்போன் விலையெல்லாம் குறையப்போகுதாம், விவரம் தெரிஞ்சுக்கோங்க!

விலை குறைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்போ, விவோ, சாம்சங் நிறுவனங்கள்!

ஹைலைட்ஸ்
  • 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட போகோ F1-ன் விலை 20,999 ரூபாய்
  • சாம்சங் ஸ்மார்ட்போன்கள் 3,000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
  • விவோ V15 Pro-வின் விலையை 2,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகையில் பழைய ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பது வழக்கம். அதேபோல சியோமி, சாம்சங், விவோ, ஓப்போ ஆகிய நிறுவனங்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்கள் விலையை இந்த மாதத்தில் ஒரே நேரத்தில் குறைக்கவுள்ளது. இந்த விலை குறைப்பில் சாம்சங் A தொடரில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்கள், ஓப்போ F11 Pro, விவோ V15 Pro என பல ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. எந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலை குறைக்கப்பட்டிருக்கு, தெரிஞ்சுக்கோங்க!

போகோ F1 (Poco F1)

சியோமி நிறுவனத்தின் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்தான் இந்த போகோ F1. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த போகோ F1-ன் விலையை, தற்போது 20,999 ரூபாயாக குறைத்திருக்கிறது சியோமி நிறுவனம். முன்னதாக இதன் விலை 22,999 ரூபாயாக இருந்தது. ஏற்கனவே, இதன் விலையை 22,999 ரூபாயாக குறைத்திருந்த சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனை 23,999 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Steel Blue), கருப்பு (Graphite Black), மற்றும் சிவப்பு (Rosso Red) ஆகிய வண்ணங்களில் விற்பனையில் உள்ளது. 

ஆசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1 (Asus ZenFone Max M1)

இந்த விலை குறைப்பில் ஈடுபட்டுள்ள ஆசுஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனான ஆசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1-ன் விலையை, 8,999 ரூபாய் என்ற அறிமுக விலையில் இருந்து 6,999 ரூபாயாக குறைத்துள்ளது. தனது மற்றொரு ஸ்மார்ட்போனான ஆசுஸ் ஜென்போன் லைட் L1  (Asus ZenFone Lite L1)-ன் விலையையும் குறைத்துள்ள ஆசுஸ் நிறுவனம், 4,999 ரூபாயாக இதன் விலையை  நிர்ணயித்துள்ளது. இதன் அறிமுக விலை 6,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்சி A9 (Samsung Galaxy A9)

சென்ற ஆண்டு அறிமுகமான தனது ஸ்மார்ட்போன் கேலக்சி A9-ன் விலையையும் அதிரடியாக குறைத்துள்ளது சாம்சங் நிறுவனம். தன் தற்போதைய விலையிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் துவக்க விலை தற்போது 25,990 ரூபாய் மட்டுமே. 6GB + 128GB சேமிப்பு கொண்ட இந்த வகை ஸ்மார்ட்போனின் விலை 25,990 ரூபாய் எனவும், 31,990 ரூபாய் விலையில் இருந்த 8GB + 128GB சேமிப்பு கொண்ட இந்த வகை ஸ்மார்ட்பொனின் விலை 28,990 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் பொழுது இதன் துவக்க விலை 36,990 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கெலக்சி A7, கெலக்சி A10, கெலக்சி A20 மற்றும் கெலக்சி A30-யும் 3 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது

ஓப்போ F11 Pro (Oppo F11 Pro)

இந்தியாவில் ஓப்போ F11 Pro, 64GB வகை ஸ்மார்ட்போனின் விலை 22,990 ரூபாய் எனவும், 128GB வகை ஸ்மார்ட்போனின் விலை 23,990 ரூபாய் எனவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் வெளியான இந்த ஸ்மார்ட்போன், 24,990 ரூபாய்க்கு அறிமுகமாகவுள்ளது. ஓப்போ F11-ம் இந்த விலை குறைப்பில் இடம் பெற்றுள்ளது. அதன்படி இதன் விலை 17,990 ரூபாய் என அறிவித்துள்ளது ஓப்போ நிறுவனம். 

விவோ V15 Pro (Vivo V15 Pro)

இந்த விலை குறைப்பில் விவோ நிறுவனமும் இடம் பெற்றுள்ளது. விவோ V15 Pro-வின் விலையை 2,000 ரூபாய் குறைத்துள்ளது இந்த நிறுவனம். அதன்படி 28,990 ரூபாய் என அறிமுகத்தின் பொழுது இருந்த இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை 26,990 ரூபாய்.

மேலும், தனது மற்றொரு ஸ்மார்ட்போனான விவோ V15-ன் விலை மேலும் 2,000 ரூபாய் குறைத்துள்ளது. முன்னதாக 23,990 ரூபாய்க்கு அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் விலையை 21,990 ரூபாய் என கடந்த ஏப்ரல் மாதம் குறைக்கப்பட்டது. தற்போது, இந்த விலை குறைப்பிற்கு பிறகு இதன் விலை, 19,990 ரூபாய். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.